வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி மறைவிடம் சென்று அதோடு ஒன்று அல்லது இரண்டு கிரகங்கள் நீசம் ஆகிவிட்டால் அவர் ஒரு காவிதுணியை கட்டிக்கொண்டு செல்லவேண்டியது தான் இல்லை என்றால் இந்த உலகம் அவரை போட்டு படுத்தி எடுத்துக்கொண்டுவிடும்.
ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நீசம் பெறும்பொழுது அந்த விசயத்திற்க்காக அவர் மிகுந்த சிரமப்பட நேரிடும். நீசகிரகங்கள் பலனை அதிகளவில் கொடுப்பதில்லை. நீசகிரகங்கள் பலன் கொடுத்தாலும் நூற்றுக்கு பத்து சதவீதம் வட பலனை கொடுப்பதில்லை என்பதை பலரின் ஜாதகத்தில் அனுபவ ரீதியாக நான் அறிவேன்.
ஜாதகத்தில் லக்கினாதிபதி நன்றாக இருந்தால் ஒரளவு போட்டு இழுத்துக்கொண்டு வந்துவிடும். லக்கினாதிபதி சரியில்லாமல் அதோடு இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட கிரகங்கள் நீசம் என்ற நிலையை அடையும்பொழுது அவர் மிகுந்த கஷ்டத்தை அடைவார்.
லக்கினாதிபதியே நீசம் என்ற நிலையை அடைந்தால் அவரை பிறர் பயன்படுத்திக்கொள்வார்கள். அவர் ஊருக்கு உழைத்து அவர் வீணாகபோய்விடுவார். அவர் உழைத்தற்க்கு சம்பளம் கூட கிடைக்காமல் போய்விடும்.
லக்கினாதிபதி நன்றாக இருந்து பிற கிரகங்கள் நீச ஆனால் பரவாயில்லை. லக்கினாதிபதி போட்டு இழுத்துக்கொண்டு வந்து அவரை ஒரளவு காப்பாற்றிவிடும். வாழ்வில் வெற்றி என்பது குறைவாக இருக்கும்.
எப்பேர்பட்ட ஜாதகமும் ஏதோ ஒரு கிரகம் இருந்து அவர்களுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முனையும் என்ன என்றால் நிறைய இழப்பிற்க்கு பிறகு அந்த வாழ்க்கை அமையும். நிறைய ஏக்கத்தோடு அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வது போல இருக்கும்.
ஆடி மாதத்தில் அனைவரையும் விருப்ப சந்தாவை அனுப்ப சொல்லுவேன். அனைவரும் அன்போடு அனுப்பி வையுங்கள். ஆடி மாதத்தில் இலவச சோதிட ஆலோசனை இருக்கின்றது அனைவரும் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment