வணக்கம்!
நேற்று மதுரை பயணத்தில் நண்பரை சந்தித்துவிட்டு நேராக அழகர்கோவில் சென்றாேம். பழமுதிர்சோலை செல்லவேண்டும் என்பதை சொன்னேன். நண்பர் பழமுதிர்சோலைக்கு அழைத்து சென்றார். பழமுதிர்சோலையில் சாமி தரிசனம் முடிந்து அங்கிருந்து இராக்காயிகோவில் சென்றோம்.
இராக்காயிகோவில் புனித நீராடல் மிக புனிதமான ஒன்று. இந்த கோவில்கள் எல்லாம் நீங்கள் ஏற்கனவே சென்று வந்து இருக்கலாம். உங்களுக்காக நினைவூட்ட வேண்டும் என்பதற்க்காக இதனை தருகிறேன்.
இராக்காயிகோவில் புனித நீராடல் நமக்கு ஒரு புதிய சக்தியை கொடுக்கிறது. கண்டிப்பாக இந்த கோவிலுக்கு சென்று நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வரவும். மதுரையில் இருப்பவர்கள் அடிக்கடி கூட சென்று நீராடிவிட்டு வரலாம்.
இராக்காயிகோவிலுக்கு மேலே மலையில் இராமதேவர் ஜீவசமாதி இருக்கின்றது. அதற்கு செல்வதற்க்கு இந்த போதாது பாதை மிக கடினம் மலை ஏற்றத்திற்க்கு கூட்டமாக வந்தால் போகலாம் என்று நண்பர் சொன்னார். இன்று கண்டிப்பாக செல்லமுடியாது வேறு ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டோம்.
மலையை விட்டு கீழே இறங்கும்பொழுது பெரியாழ்வார் ஜீவசமாதி இருக்கின்றது அதனை தரிசனம் செய்துவிட்டு செல்லலாம் என்று நண்பர் கோபி சொன்னார். பெரியாழ்வார் ஜீவசமாதியும் தரிசனம் செய்துவிட்டு அதன்பிறகு மதுரை சென்றோம்.
மதுரையில் நண்பரை சந்திக்க சென்றேன். எங்கிருந்தோ என்னை அழைத்துக்கொண்டு சக்தியை உணர்வதற்க்கு அழைத்த அந்த சக்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் இந்த பதிவை தருகிறேன். அனைவரும் சென்று வாருங்கள். மலை கோவிலுக்கு அழகர்கோவிலில் இருந்து பேருந்து வசதி இருக்கின்றது. நடை பயணமாகவும் செல்லலாம். கார் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும்.
இந்த பயணத்திற்க்கும் மற்றும் சிறந்த முறையில் கைடு செய்த நண்பர் கோபிக்கு நன்றியை தெரிவிக்கவேண்டும்.
இன்றைய ஆடி வெள்ளி அம்மனுக்கு சிறப்பு யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தியவர் நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment