வணக்கம்!
வருடந்தோறும் ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமை ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் மாரியம்மனுக்கு விரதம் இருப்பார்கள். பல கிராமங்களில் இது நடைமுறையில் இருக்கின்றன. இன்று ஆவணி ஞாயிற்றுகிழமை தொடங்குகின்றது. கடைசி ஞாயிற்றுகிழமை அன்று மாரியம்மனுக்கு கடைஞாயிறு திருவிழா கொண்டாடுவார்கள்.
பெரும்பாலும் புரட்டாசி விரதம் பெருமாளுக்கு இருப்பவர்கள் அனைவரும் ஆவணி ஞாயிற்றுகிழமை விரதம் பிடிப்பார்கள். இது தஞ்சாவூர் பகுதியில் நடந்துவரும் ஒரு வழிமுறை. பல ஊர்களிலும் இப்படியே நடக்கலாம்.
மாரியம்மன் என்றாலே மழைக்காக ஒரு கடவுள் என்பது போலவே அனைத்து ஊர்களிலும் திருவிழா நடத்துவார்கள். மாரியம்மன் இரண்டு விதத்தில் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு நடத்துவார்கள். ஒன்று மழைக்காக நடத்துவார்கள் அடுத்தது அம்மை போன்ற நாேய்கள் வராமல் இருப்பதற்க்கு வழிபாடு நடத்துவார்கள்.
நமது பழமையான முறைப்படி ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு மாரியம்மன் கண்டிப்பாக இருக்கும். மாரியம்மன் பெயரில் வித்தியாசம் இருக்குமே தவிர மற்றபடி அனைத்தும் மாரியம்மன் மட்டுமே.
ஆவணி ஞாயிற்றுகிழமை என்பது ஆண்களை விட பெண்கள் தான் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் விரதம் இருப்பார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment