வணக்கம்!
கிராமபுறங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். கெட்டமதி கண்களுக்கு தெரியாது என்பார்கள். கெட்ட மதி என்றால் நமக்கு வருகின்ற தீமையான விதி என்று அர்த்தம் என்பார்கள். நமக்கு தெரியாத விதியை சோதிடத்தில் சொன்னாலும் அதனை அந்தளவுக்கு எடுத்துக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்வதில்லை.
சாேதிடன் சொல்லுவான் இவன் சொல்லுவது அனைத்தும் நடந்துவிடுகிறதா என்ன என்று சொல்லுவார்கள். உண்மையில் நமக்கு வருகின்ற கெட்ட விதி என்பது நம்மை அடித்து காலி செய்துவிடும். அதனை அறிந்து நாம் நடந்துக்கொள்ளவேண்டும்.
ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் விதியை புரிந்துக்கொண்டு நடக்கவே மாட்டார்கள். அவர் அவர்களின் இஷ்டத்திற்க்கு நடந்துக்கொள்வார்கள். ஏட்டிக்கு போட்டியாக ஒருவர் நடந்தாலே அந்த குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
ஒருவரின் குடும்பத்தில் குடும்பத்தின் தலைவரின் பேச்சை கேட்டு நடக்காமல் இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிகப்பட்சம் இராகு தசா நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
இராகு தசா நடந்தால் மூளை அது இஷ்டத்திற்க்கு செயல்பட்டுக்கொண்டு இருக்கும். யார் பேச்சையும் கேட்காமல் இஷ்டத்திற்க்கு செயல்படும். கெட்டமதி கண்களுக்கு தெரியாது என்பது அதிகபட்சம் இராகு தசா நடப்பவர்களுக்கு சொல்லலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment