வணக்கம்!
இன்று ஆடி வெள்ளி அம்மன் யாகத்திற்க்கு திருப்பூரை சேர்ந்த ஒருவர் காணிக்கை செலுத்தியுள்ளார்.
நாளை ஆடி அமாவாசை. பலர் ஆடி அமாவாசைக்கு என்ன செய்யலாம் என்று கேட்டனர். தாய் தந்தையில் யாராவது ஒருவர் இறந்து ஒரு வருடம் முடிந்தால் அவர்களுக்காக அமாவாசை விரதம் இருக்கலாம்.
ஆடி அமாவாசை விரதம் செய்யும் வீட்டை சுத்தமாக்கிவிட்டு விரதம் இருந்து மதியம் 1 மணிக்கு மேல் விரதம் முடிக்கும் விதமாக சமைத்து விரதம் செய்யலாம். ஆடி அமாவாசைக்கு என்று காய்கறிகளை சமைப்பார்கள்.
காய்கறிகளில் புடலங்காய் மற்றும் ஆதண்டங்காய் என்ற காய்களை பிரத்தனமாக சமைப்பார்கள். புடலங்காய் கண்டிப்பாக இடம் பெறவேண்டிய ஒன்று. இதில் ஒன்றையாவது வைத்து விரத சமையலை செய்ய செய்து விரதம் செய்யவேண்டும்.
பலர் கோவில்களில் சென்று அமாவாசை தர்பணம் செய்வார்கள். பல இடத்தில் இது கூட்டாக கோவிந்த பாடுவது போல இருக்கின்றது. உங்களுக்கு முடிந்தால் இதனை செய்யலாம் அப்படி இல்லை என்றால் நீங்கள் வீட்டிலேயே விரதம் இருந்து கொடுத்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment