வணக்கம்!
விஷத்தை விஷம் கொண்டு தான் முறிக்கவேண்டும் என்பதற்க்கு பல உதாரணத்தை சொல்லலாம் ஆனால் அது எனக்கே அப்படிப்பட்ட உதாரணம் இருந்தது அதனை வைத்து உங்களிடம் சொல்லுகிறேன்.
விஷம் கக்கும் இராகு கேதுவிற்க்குள் நான் கொஞ்சகாலம் மாட்டிக்கொண்டேன். இது எனது உடல்நிலையில் பிரச்சினையை கொடுத்தது. வாழ்க்கையில் அனைத்தையும் போராடி தான் வெல்ல வேண்டும். இதனையும் போராடி வென்றேன்.
பரிகாரம் என்பது அடுத்தவர்களுக்கு செய்தால் அது நடக்கும் ஆனால் நமக்கு பரிகாரம் செய்வதற்க்கு நிறைய அனுமதி வாங்கவேண்டும் என்பதால் அதனை கொஞ்சம் ஒதுக்கி தள்ளி வைத்துக்கொண்டு வேறு ஒரு வழியில் முயற்சித்து அதில் வெற்றியை கண்டேன்.
இராகு கேது கண்டிப்பாக உங்களின் இராசியை கடக்கும்பொழுது உங்களுக்குள் ஒரு விஷத்தை கக்கிவிட்டு சென்றுவிடும் அது குடும்பத்தை சீரழிக்கலாம் அல்லது உடல்நிலையை சீரழிக்கலாம் ஏதோ ஒன்று செய்யும்.
இராசியை கடக்கும்பொழுது மட்டும் இல்லாமல் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் இருந்து பிரச்சினையை கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றது. கோச்சாரபடி மற்றும் தசாப்படியும் பிரச்சினையை கொடுக்கும். இதனை நன்கு கவனித்து அதற்கு தகுந்தார் போல் செய்யவேண்டும்.
இராகு கேது காரத்துவம் உடைய வேலைகளை கையில் எடுத்து செய்துவிட்டால் நமக்கு இராகு கேதுவால் வருகின்ற விஷம் குறைந்துவிடும். இது எந்த வேலையாகவும் இருக்கலாம் ஆனால் செய்யவேண்டும் செய்தால் பலன் கிடைக்கிறது. இராகு கேது காரத்துவம் உடைய ஒரு வேலையை நான் எடுத்து செய்தேன் அது என்னை காப்பாற்றியது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment