Followers

Saturday, December 29, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் பதிவுகளை தருவதற்க்கும் நிறைய இடைஞ்சல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அதனை மீறியும் பதிவுகளை எப்படியும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். புயல் அடித்த காரணத்தால் பகல் நேரத்தில் மின்சாரப்பணி நடைபெறுவதால் மின்சாரம் வருவதில்லை. மின்சாரம் வந்தபிறகு ஒரு வாரம் பகலில் மின்சாரம் கொடுத்தார்கள் தற்பொழுது எல்லாம் பகலில் மின்சாரம் வருவதில்லை.

தோஷங்களை போக்கும் வழி என்ற பதிவை படித்துவிட்டு நாம் செய்யும் பரிகாரம் மற்றும் பூஜைகளால் நமது தோஷங்கள் எல்லாம் நம்மைவிட்டு போகுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார். மனிதனை பிடித்து இருக்கும் கர்மாவை போக்கவில்லை என்றால் நாட்டில் கோவில் என்பதே இருக்காது நண்பரே.

கோவில் கட்டி இருப்பதே நம்முடைய கர்மாவை போக்கி இந்த வாழ்விலும் பிற ஜென்மத்திலும் ஒரு நல்ல கதியை கொடு என்பதற்க்காக தான் கோவிலை கட்டி வழிபட்டுக்கொண்டு மக்கள் இருக்கின்றார்கள். 

நாம் சொல்லும் விசயங்கள் நடக்கவில்லை என்றாலும் நாம் செய்யும் பரிகாரங்கள் எடுபடவில்லை என்றாலும் இத்தனை காலங்கள் நாம் எழுதவே முடியாது. பல வருடங்கள் எழுதிய பதிவுகளை எல்லாம் படித்து பயன்பெறுவதால் மட்டுமே எழுத முடிகின்றது.

நாம் சொல்லும் பரிகாரம் மற்றும் பூஜைகள் நல்ல பலனை கொடுக்கும். நீங்கள் செய்யும் வழிபாடுகளும் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். முதலில் நம்பிக்கை வைத்து அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வாருங்கள் நல்ல வாழ்க்கை அமைவது உறுதியாக சொல்லலாம்.

புத்தாண்டுக்கு விஷேசமாக வழிபாட்டை செய்யவேண்டுமா என்று நண்பர் ஒருவர் போனில் தொடர்புக்கொண்டு கேட்டார். புத்தாண்டுக்கு என்று நாம் விஷேசமாக வழிபாட்டை செய்யவேண்டியதில்லை வழக்கம் போல் வீட்டிலேயே வழிபாட்டை செய்யலாம். 

புத்தாண்டு என்பது வலுக்கட்டயமாக நம்மீது திணித்த ஒன்று தான். இதனை வைத்தே நமது சம்பளமும் இருக்கின்றது என்பதால் அன்றைய நாளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அனைத்து அலுவலகமும் ஆங்கில வருடத்தை கணக்கில் வைத்து தான் சம்பளம் வந்துக்கொண்டு இருப்பதால் இதனை சொல்லுகிறேன். இரவில் வழிபாட்டை எல்லாம் செய்யவேண்டாம். பகலில் வழிபாடு செய்தால் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: