வணக்கம்!
இது பெருமைக்காக எழுதப்பட்ட பதிவு என்பது போல இருக்கும் ஆனால் இது உண்மையாக நடந்த பதிவு என்பதை சொல்லுகிறேன். எப்பொழுதுமே ஆன்மீகவாதிகளுக்குள் பிரச்சினை என்பது இருந்துக்கொண்டே இருக்கும். ஒருத்தருக்குள் ஒருத்தர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். நிறைய பொறாமை நிறைய கருத்து வேறுபாடு நிறைய மோதல்கள் எல்லாம் ஆன்மீகவாதிகளுக்குள் இருக்கும்.
பார்வையாளனகாக இருந்து இதனை பார்த்து உங்களுக்கு தருகிறேன். சென்னையில் இரண்டு ஆன்மீகவாதிகள் இருந்தனர். இந்த இரண்டு பேருக்கும் கடுமையான போட்டி. நான் பெரிய ஆளா அல்லது நீ பெரிய ஆளா என்று போட்டி இருந்தது.
ஒருவருக்கு வயது அதிகமாக இருந்தது ஒருவருக்கு என்னுடைய ஒத்த வயதை உடைய ஆன்மீகவாதியாக இருந்தார். அவர் இளமையில் அவர் வளர்ந்தது மூத்த வயதில் உள்ள ஆன்மீகவாதிக்கு பிடிக்கவில்லை. மூத்தவர்க்கு இளையவர் மீது பொறாமையாக இருந்தது.
மூத்தவர் நிறைய ஆன்மீகவழியில் அவரை தோற்கடிக்கும் விதத்தில் செயல்பட்டார். இளம்வயதில் இருந்த ஆன்மீகவாதி நிறைய தொல்லைகள் பட்டாலும் அதனை எல்லாம் பொறுத்துக்கொண்டே இருந்தார். அவர் வேலை உண்டு என்பது போலவே செயல்பட்டார்.
எதற்க்கும் ஒரு எல்லை உண்டு என்று தெரியும். இளம் வயதில் உள்ளவர் ஒரு காலக்கட்டத்திற்க்கு மேல் தாங்க முடியாமல் ஒரு வேலையை செய்தார். இனிமேல் சென்னையில் இவர் இருக்க முடியாதபடி ஆன்மீகவழியில் செய்தார். இவர் வேலை செய்த நேரம் மூத்த ஆன்மீகவாதிக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வந்து சென்னையை விட்டே செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.
இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் சென்றுவிட்டது. இதுவரை அவரால் சென்னை பக்கம் வரவே முடியாத நிலையில் தான் இருக்கின்றது. இதில் என்ன இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கலாம். இது வெறும் பொறாமை சண்டை தானே என்று நினைக்கலாம்.
ஆன்மீகவழியில் ஒரு செயல் நடந்துவிட்டால் அந்த செயலை மறுபடியும் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் என்பது கிடையாது. அவர் இறந்தாலும் கூட அந்த காரியத்தை மீறி செயல்படமுடியாது எத்தனை ஆயிரம் வருடங்கள் சென்றாலும் அந்த நிகழ்வு என்பது அப்படியே இருக்கும் என்பதை சொல்லுவதற்க்கு இதனை சொன்னேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment