வணக்கம்!
பூர்வபுண்ணியத்தைப்பற்றியும் நமது நண்பர்கள் எழுத சொல்லிருந்தனர் அல்லவா. பூர்வபுண்ணியம் சம்பந்தமாக நிறைய பதிவுகளை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். இதனை படித்துவிட்டு பல நண்பர்கள் தங்களின் பூர்வபுண்ணியத்தோடு தொடர்புடைய பலரை அடையாளம் கண்டுக்கொண்டனர். இதனை தொடர்ச்சியாக எழுதாமல் போனதற்க்கும் காரணம் இருக்கின்றன.
பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்டவரை பார்க்கும்பொழுது கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் சண்டை சச்சரவு ஏற்பட்டுவிடும். சண்டை சச்சரவு ஏற்பட்ட காரணத்தால் பேசமால் கூட சென்றுவிடுவார்கள். பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்டவரை சந்திக்க நேர்ந்தால் அவரோடு அன்பாக இருக்கவேண்டும் என்பதற்க்காக தான் இதனை எழுதியது உண்டு.
பெரும்பாலும் இது சாதாரணமானவர்களுக்கு பைத்தியம் போல நம்மை பார்க்க தோன்றும் அதே நேரத்தில் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இது அற்புதமாகவே தோன்றும். நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதால் இதனை அனைத்தையும் ஒரு உணர்வு பூர்வமாகவே எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.
எந்த காரணத்திலும் வெறுப்பு மற்றும் சண்டை சச்சரவு ஏற்படுத்த கூடாது. ஏதோ ஒரு விதத்தில் அனைவரும் தொடர்போடு இருக்கின்றனர் என்பது மட்டும் ஒரு சில காலங்களுக்கு பிறகு உங்களுக்கு தோன்றும் நிலை ஏற்படும் அப்பொழுது நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்து நிலையை எட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்ற அர்த்தம் கொள்ளவேண்டும்.
பூர்வபுண்ணியத்தை சரி செய்து அதன் வழியாக நல்ல வாழ்க்கையை நீங்களும் மற்றும் உங்களை சார்ந்தவர்களும் வாழ்வதற்க்கு மட்டுமே இந்த தலைப்பை நாம் தேர்ந்தெடுத்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment