வணக்கம்!
ஒருவருக்கு சனி தசா நடக்கும்பொழுது அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார். சனிகிரகம் சுயஜாதகத்தில் எங்கு இருக்கின்றது என்பதை பொறுத்து சொன்னால் பலன் துல்லியமாக இருக்கும். பொது பலன்கள் என்பதால் ஒரளவு சரியாக இருக்கும்.
சனிக்கிரகம் எந்த இராசியில் இருக்கின்றது. சனிக்கிரகத்தின் பலன் எப்படி இருக்கின்றது. சனியை பார்க்கும் கிரகத்தின் தன்மையை ஆராய்ந்து பலனை பார்த்துக்கொண்டு பலனை சொன்னால் துல்லியமான பலன் கிடைக்கும்.
சனியின் காரத்துவம் மந்தநிலை. செயல்பாடுகளில் மந்தநிலையை காட்டக்கூடியதாக இருக்கும். பிறர் உங்களை தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒன்று சம்பந்தம் இல்லாமல் உங்களை துரத்துவது போலவே பொதுவாக அனைவருக்கும் அமைந்துவிடுகின்றது.
சனியின் பலம் பெற்று தசா நடந்தால் அவர்களுக்கு நல்ல செல்வாக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வந்துக்கொண்டு இருக்கும். அரசியல் தொடர்பால் நல்ல நிலைக்கு வரலாம்.
சனி பலம் இல்லாமல் தசா நடந்தால் உங்களுக்கு உடல்ரீதியாக பிரச்சினை வரும். எதனால் உங்களின் உடல் இப்படி கெடுகிறது என்று கூட தெரியாது. மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு நோய் வரும்.
சனி தசா நடந்தாலும் அதில் நடக்கும் புத்திகளை பொறுத்தும் பலன் நடக்கும் ஒரு வேளை சனி நல்ல பலனோடு நடந்தால் அவர்களுக்கு நடக்கின்ற புத்தி அனைத்திலும் நல்ல பலன் கிடைக்கின்றது. சனி தசா நடக்கும் காலங்கள் முழுவதும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. இயற்கையிலேயே சனிக்கிரகம் பாவக்கிரகம் என்பதால் கெட்டது அதிகமாகவே கொடுக்கின்றது.
சனி தசாவிற்க்குரிய பரிகாரம் செய்யவும். சனிக்கிழமை தோறும் சனிபகவானை தரிசனம் செய்யலாம் அதோடு ஆஞ்சநேயரையும் வழிபடலாம். சனியின் இராசி உடைய மகரம் மற்றும் கும்ப இராசியினரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் சனி தசாயால் நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment