வணக்கம்!
இது உண்மையில் நடந்த ஒன்று. பூர்வபுண்ணியம் எழுதிய பழைய காலத்தில் நடந்தது என்று சொல்லலாம். நம்ம ஆள் ஒருவர் நமது பதிவுகளை படித்துவிட்டு அவர் தன்னுடைய பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட நபரை தேடியிருக்கிறார். அவரின் பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட நபர் அடுத்தவரின் மனைவியாக இருந்திருக்கிறார்.
நம்ம ஆள் தேடிய நண்பரின் மனைவியாக இருந்திருக்கிறார். இவர் நேராக போய் நீங்கள் தான் என்னுடைய முன்ஜென்ம மனைவியாக இருந்திருக்கிறார் என்று சொல்லிருக்கிறார். இது முடிந்தபிறகு என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யோசித்து இருக்கமுடியும். சண்டை தான் வந்திருக்கின்றது.
இந்த காலத்தில் போய் பூர்வஜென்மத்தோடு நீங்கள் சம்பந்தப்பட்டு இருக்கின்றீர்கள் என்று அடுத்தவர்களிடம் நீங்கள் சொன்னால் கண்டிப்பாக உங்களை பைத்தியக்காரன் என்று தான் சொல்லுவார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இதனை ஏற்றுக்கொள்ளுவார்கள். சாதாரணமாக இருக்கும் நபர்களுக்கு இது சாத்தியபடக்கூடிய ஒன்று கிடையாது.
பூர்வபுண்ணியத்தை நிறுத்திய காரணமும் இந்த காரணத்தால் தான் நிறுத்தினேன். எதார்த்தமான வாழ்க்கை என்பது வேறு ஆன்மீக வாழ்க்கை என்பது வேறு. ஆன்மீகத்தை எதார்த்தமான வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கமுடியாது. எதார்த்தமான வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால் அனைவரும் ஆன்மீகவாதியாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.
உங்களுக்கே பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட நபரை பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் அதனை நீங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். பல தியான முகாம்களில் கூட முன்ஜென்மத்தை அறியும் வித்தையை கற்றுக்கொடுப்பதில்லை மேலே சொன்ன காரணத்தால் மட்டுமே இதனை அவர்கள் கொடுப்பதில்லை.
பூர்வபுண்ணியத்தை ஆராய்வது தவறு இல்லை ஆனால் இந்த காலம் என்பது வேறு. நடைமுறையில் நிறைய சிக்கல்கள் எல்லாம் வரும். சம்பந்தம் இல்லாமல் மாட்டிக்கொள்ளவேண்டாம். ஆன்மீகத்தில் ஒரு அங்கம் பூர்வபுண்ணியம் இருப்பதால் தான் இதனை எழுதுகிறேன்.
பூர்வபுண்ணியத்தை பற்றி நான் ஆராய்ந்த வரையிலும் மனநிலையில் அதிகமான பாதிப்பை கொடுத்துவிடக்கூடிய ஒன்று. இதனை அவ்வளவு எளிதில் நாம் எடுத்துக்கொள்ளமுடியாது. உங்களின் முன்ஜென்மத்தோடு சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் காணும்பொழுது நீங்கள் வாழ்கின்ற தற்பொழுது வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதால் இதில் அதிகமாக இறங்கவேண்டாம். சும்மா படித்துவிட்டு செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment