வணக்கம்!
ஆருத்ரா நாளில் நாளில் சிவனை வணங்கிக்கொண்டு எந்த நாளிலும் என்னுடைய வாழ்க்கையை கீழ் நோக்கி செல்லக்கூடாது மேல் நோக்கியே செல்லவேண்டும் என்று எண்ணி வணங்குங்கள் கண்டிப்பாக சிவன் உங்களுக்கு அதனை உங்களுக்கு வழங்குவார்.
பெரும்பாலும் அன்றைய விஷேச நாளில் மக்கள் கோவிலுக்கு வழிபட்டு வருவார்கள். நான் பெரும்பாலும் பூஜையறையிலேயே வணங்கிவிடுவது உண்டு. அனைத்து நாளிலும் நீங்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிரமம்.
சிவராத்திரி அன்று சிவனை நினைத்தால் நல்லது என்பார்கள். ஆருத்ரா நாளில் சிவனை பார்த்தால் நல்லது என்பார்கள். பெரும்பாலும் சிவனை நினைப்பதே பெரிய விசயம் என்றே சொல்லலாம்.
சிவனை என்றும் நினைத்துக்கொண்டு இருப்பது பெரிய வரம் என்றே சொல்லலாம். அதுவே மிகப்பெரிய யாகத்தை நீங்கள் தினமும் செய்கின்றீர்கள் என்று அர்த்தம். சிவனை முடிந்தவரை நினைத்து நீங்கள் வாழ்ந்தால் வாழ்வில் ஞானத்தை உங்களின் குடும்பங்களும் உங்களை சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும்.
எந்த விஷேசமாக இருந்தாலும் அது நட்சத்திரத்தோடு தான் சம்பந்தப்பட்டு இருக்கும். சோதிடத்தில் உங்களின் நட்சத்திரத்திற்க்கு அதிக முக்கியத்துவம் உண்டு. விழாக்களும் நட்சத்திரப்படி தான் நடைபெறுகின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment