வணக்கம்!
சபரிமலை மற்றும் பழனிக்கு மாலையணிவது எல்லாம் என்ன சூட்சமம் இருக்கின்றது என்று நண்பர் ஒருவர் கேட்டார்.
தன்னை சுத்தப்படுத்திக்கொள்வது தான் முதல் காரணியாக இருக்கும். உங்களின் குலதெய்வமே இதனை கொடுக்கும் ஆனால் நாம் அதற்கு என்று தயார்படுத்திக்கொள்ளாமல் சும்மா சாமியை கும்பிடுவீர்கள். நம்முடைய குலதெய்வம் தானே என்ற ஒரு அலட்சியமும் இருக்கும்.
தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு ஒரு சில காலங்கள் ஒழுக்கத்தோடு வாழ்வதற்க்கும் இதனை பயன்படுத்திக்கொள்கின்றனர். பொதுவாக இதற்கு எல்லாம் யாத்திரையாக அதாவது பாதயாத்திரையாக சென்றால் நல்லது.
பாதயாத்திரை செல்லும்பொழுது மட்டுமே சிறப்பான ஒரு அனுபவமும் நமக்கு ஏற்படும். இன்றைக்கு சாலை மார்க்கமாக இருக்கும் பழனி எல்லாம் ஒரு சில காலத்திற்க்கு முன்பு காடு மார்க்கமாக இருந்து இருக்கும். இன்று சபரிமலை மட்டும் கொஞ்சம் காடாக இருக்கின்றது.
காட்டில் நீங்கள் செல்லும்பொழுது பல அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும் அதோடு நமது ஜாதகத்தில் உள்ள தீய கிரகங்களுக்கு எல்லாம் பரிகாரமாக கூட அது அமைந்திருக்கும் இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அன்று இதனை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
இன்றைக்கு அனைவரும் வாகனத்தில் செல்கின்றனர். இன்று அனைத்தும் சாலைகள் என்பதால் பெரிய அனுபவத்திற்க்கு வழி இல்லை என்பதாலும் வாகனத்தில் செல்லலாம். காடுகளாக இருக்கும் பட்சத்தில் பாதயாத்திரை நன்மை பயக்கும்.
மாலையணிவது என்பது தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு தன்னில் இருக்கும் ஆத்மாவிற்க்கு ஒரு நல்ல சக்தியை ஏற்படுத்துவதற்க்கு என்று தான் ஏற்படுத்தியிருப்பார்கள். இன்றைக்கு அது எந்தளவுக்கு வேலை செய்கின்றது என்பது அவர் அவர்களின் விரதமுறையிலும் பயணங்களிலும் இருக்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment