வணக்கம்!
இன்றைய காலத்தில் இரண்டில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒன்று சாராயகடை அடுத்தது ஆன்மீக கடை இந்த இரண்டிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். மனிதன் தேடும் தேடுதலில் இந்த இரண்டும் முக்கியபங்கு வகிக்கும்.
சாராயகடையைப்பற்றி நாம் பேசவேண்டாம். ஆன்மீக கடையைப்பற்றி பார்க்கலாம். ஆன்மீகத்தை நிறைய பேர் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த தேடுதல் நன்றாக இருக்கலாம் ஆனால் இந்த தேடுதலுக்கு கண்டிப்பாக ஒருவர் வேண்டும். எல்லோரும் தேடுகின்றனர் ஆனால் அதில் குரு என்பவர் இல்லை என்பதால் தான் இதில் முழுமை பெறுவதில்லை.
ஒவ்வொரும் முடிந்தளவுக்கு ஆன்மீகத்தை தேடிச்செல்கின்றனர். கலியுகத்தில் ஒரு மனிதனை உங்களால் அவ்வளவு எளிதில் பிடித்துக்கொள்ளமுடியாது. உங்களின் மனது குருவை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமுடியாது.
மனிதன் தான் கை பிடித்து கடவுளை காட்ட வேண்டும். இங்கு மனிதனை அவ்வளவு எளிதில் மனம் ஏற்றுக்கொள்ளமுடியாத காரணத்தால் தான் ஆன்மீகத்தை முழுமையாக உணரமுடியாமல் இருக்கின்றது.
நீங்கள் கோவில் கோவிலாக அலைவதை விட ஒரு நல்ல குருவை அடைவதற்க்கு என்ன வழி என்பதை பார்க்கவேண்டும். எல்லோரையும் முடிந்தவரை நன்றாக கவனித்து பார்த்தால் அனைத்தையும் தெரிந்துக்கொள்ள பார்ப்பார்கள் ஆனால் ஒரு குருவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment