வணக்கம்!
இராமர் போரில் பல உயிர்களை கொன்றதால் அவர்க்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. எதிரியாக இருந்தாலும் அவனும் மனிதன் தான் ஒரு மனிதனின் சரீரத்திற்க்கு ஏற்படுத்திய காயத்தால் அவர்க்கு இந்த தோஷம் ஏற்பட்டது என்று சொல்லுவார்கள். கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படும் நபர்க்கு இந்த தோஷம் வருகின்றது என்றால் சாதாரண மனிதனின் நிலையைப்பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை.
இந்த காலத்தில் மனிதன் செய்யும் தவறு ஒரு சரீரத்திற்க்கு தீங்கு ஏற்படுத்தினால் அவருக்கு இப்படிப்பட்ட தோஷம் ஏற்படும். இந்த தோஷத்தால் அவனுக்கு நிறைய பிரச்சினை ஏற்படும். இது முதல்தரமான தோஷம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு மனிதனை ஏதோ ஒரு ஆயுதத்தால் நீங்கள் காயப்படுத்தினால் தோஷம் உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதனால் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை என்று நீங்கள் எடுத்துக்கொண்டு இந்த மாதிரியான செயலை செய்யக்கூடாது.
இந்த காலத்தில் ஒரு மனிதனை கொலை செய்யும் நபர்கள் தான் அந்த ஊரில் பெரிய ஆட்களாக இருக்கின்றார்கள். நீங்கள் சொல்லுவது நடைமுறையில் சாத்தியம் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.
கலியுகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு எல்லாம் நடக்கதான் செய்யும் இருந்தாலும் ஒருவரின் தசா அவர்கள் வாழும் வாழ்க்கையை முடிவு செய்யும். தசா முடிந்த பிறகு அவர்களுக்கு அடுத்து வரும் தசா நல்ல வைத்து செய்துவிடும். நீங்களே பார்த்து இருக்கலாம். கொலை செய்து கொஞ்ச நாட்கள் ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் ஒரு சில வருஷத்திலேயே ஆட்களே இல்லாமல் போய்விடுவார்கள்.
ஒரு மனிதனின் சரீரத்திற்க்கு நீங்கள் எந்த வகையிலும் தீங்கு இழைக்க கூடாது. ஒரு மனிதனின் சரீரத்திற்க்கு தீங்கு இழைத்தால் கண்டிப்பாக உங்களுக்கும் உங்களின் வம்சத்திற்க்கு பெரிய தோஷம் வரும் என்பதால் முடிந்தவரை இதனை தவிர்க்க பாருங்கள்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பி வைக்கலாம்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பி வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment