வணக்கம்!
ஐப்பசி பெளர்ணமி அன்று உலக உயிர்களுக்காக இறைவன் உணவை படைத்ததின் காரணமாக அவர்க்கு அன்னாபிஷேகம் நடைபெறும். பெரும்பாலான சிவன் கோவில்களில் இந்த அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் இதனைப்பற்றி சொல்லி உங்களை அதில் கலந்துக்கொள்ள சொல்லுவது உண்டு அல்லது அன்றைய நாளில் அன்னதானம் செய்ய சொல்லுவது உண்டு. இந்த வருடமும் இந்த நாளில் நான் சொல்லுவது போல செய்யலாம்.
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல் இந்த அன்னாபிஷேகத்தால் வந்தது. சிவனை அன்னாபிஷேகத்தில் நீங்கள் தரிசனம் செய்யும்பொழுது நீங்கள் சொர்கத்தில் வாழ்க்கின்றீர்களோ இல்லையோ இந்த பிறவியில் கடைசி வரை சோற்றுக்கு கஷ்டம் இல்லாமல் செல்லும் அதனால் அன்னாபிஷேகத்தில் உள்ள சிவனை தரிசனம் செய்யுங்கள்.
பெரும்பாலான சிவன் கோவில்களில் வரும் திங்கள்கிழமை இரவு அன்னாபிஷேகம் நடத்தப்படுவதாக தகவல் இருக்கின்றது. உங்களுக்கு அருகாமையில் உள்ள சிவன் கோவிலை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.
தனிநபருக்காக திங்கள் கிழமை முதல் நவ அம்மன் சண்டி யாகம் நடைபெற இருக்கின்றது. நவ அம்மன் (சண்டி) யாகத்திற்க்கு காணிக்கை செய்து இருப்பவர் சென்னையை சேர்ந்த திரு முத்துகிருஷ்ணன் (உயர்நீதி மன்ற வழக்கறிஞர்) அவர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment