வணக்கம்!
வருடம்தோரும் சபரிமலைக்கு செல்பவர்களுக்கு என்று ஒரு பதிவை தருவோம். இந்த வருடம் கொஞ்சம் காலம் கடந்து இந்த பதிவை தருகிறேன். சபரிமலைக்கு என்று செல்லும் நண்பர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒரு சில விசயங்களை மட்டும் பார்க்கலாம்.
விரதமுறையை சரியாக கடைபிடிக்கவேண்டும். பெரும்பாலும் சரியாக கடைபிடித்து வந்தாலும் ஒரு சிலர் இதில் குறை வைத்துவிடுவார்கள். பெருமாளுக்கு எப்படி புரட்டாசி மாதத்தில் எப்படி கடைபிடிக்கின்றார்களே அது போலவே அதனைவிட மிக சுத்தமாக இதனை கடைபிடியுங்கள்.
சபரிமலைக்கு செல்லும் நபர்கள் பெரும்பாலும் அதிகம் பேசாமல் குறைவாக பேசுங்கள். மவுனத்தால் நிறைய ஆன்மீக சக்திகள் உங்களுக்கு வரும். இதனை வருடம் முழுவதும் உங்களை பாதுகாத்து உங்களின் நிலையை உயர்த்த உதவும்.
மாலையணியும் பக்தர்கள் ஏழைகள் எப்படி வாழ்க்கின்றனர் என்ற புரிதலை தருவதற்க்கு கடுமையான விரதத்தை எல்லாம் வைத்திருக்கின்றனர் என்று நினைத்து அதனை பின்பற்றினால் உங்களால் எளிதில் இதனை பின்பற்றிவிடலாம்.
சபரிமலைக்கு செல்லும் சாமிகள் பகல் நேர பயணத்தை மேற்க்கொள்ளுங்கள். உங்களின் வாகனத்திற்க்கும் மற்றும் வாகன ஓட்டிக்கும் போதுமான ஓய்வை கொடுங்கள். மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்குங்கள்.
பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன். சாமி தரிசனம் முடிந்த பிறகு நண்பர்கள் விருந்து வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனை எல்லாம் தயவு செய்து செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment