வணக்கம்!
ஒவ்வொரு நாளும் நமது மனதை சந்திரன் ஆட்சி செய்து அதன் வழியாக நன்மையும் தீமையும் தருகின்றது என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் தசாநாதன் கொஞ்சம் ஈடுபட்டு தன்னுடைய பங்கையும் வழங்குவார்.
ஒரு மனிதனின் மனதை அதிகபட்சம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் ஆட்சி செய்கின்றது. சந்திரனின் நகர்வை வைத்து நீங்கள் பார்த்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் நடந்துக்கொண்டு இருப்பீர்கள்.
சந்திரன் என்றாலே முதலில் பயப்படும் விசயம் சந்திராஷ்டமம் என்பது தெரியும் ஆனால் உங்களுக்கு இழப்பை அதிகமாக வழங்குவது சந்திரன் பனிரெண்டில் செல்லும்பொழுது உங்களுக்கு விரையம் அதிகமாக ஏற்படுவது உண்டு.
மருத்துவசெலவு அல்லது வாகன செலவு என்று ஏதாவது ஒன்றை வைத்துவிடும். பெரிய செலவு இல்லை என்றால் உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்லது உங்களின் வாகனத்திற்க்கு சிறிய அடியாவது பட்டுவிடும். நீங்கள் திருமணமானவர்களாக இருந்தால் பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு தலைவலி மாத்திரையாவது வாங்கிக்கொடுப்பது போல் வைத்துவிடும்.
சந்திராஷ்டமம் என்றாவது ஒரு நாள் தான் வேலை செய்யும் விரைய இராசிக்கு சந்திரன் வரும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக செலவு வைத்துவிடும். இதைப்போல் சந்திரன் உங்களின் ஜென்மநட்சத்திரத்திற்க்கு வரும்பொழுது உங்களுக்கு தலைவலியாவது வந்துவிடும் அல்லது உடற்சோர்வு ஏற்பட்டுவிடும். சந்திரனின் ஒவ்வொரு நாள் நகர்வையும் கவனித்து அதற்க்கு தகுந்தார்போல் உங்களின் திட்டத்தை செயல்படுத்திக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment