வணக்கம் நண்பர்களே !
இப்பதிவில் கும்பத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்த்துவிடலாம்.
ராகுவின் பலன்கள்
கும்பராசிக்கு இதுவரை பத்தாம் வீட்டில் இருந்த ராகு பகவான் இப்பொழுது பெயர்ச்சியாகி ஒன்பதாவது வீட்டில் வந்து அமருகிறார். உங்களுக்கு தொழிலில் லாபத்தை தந்த ராகு பகவான் பாக்கியஸ்தானத்தில் அமருவதால் ஆன்மீக விசயங்களில் மனது ஈடுபடும்.
ஸ்தல யாத்திரை பயணத்தை அடிக்கடி ஏற்படுத்துவார். ஆன்மீக குரு உங்களுக்கு அமையும் வாய்ப்பு உருவாகும். அந்த ஆன்மீககுருவின் துணைக்கொண்டு நீங்கள் ஆன்மீகத்தில் உயர ஒரு பொன்னான வாய்ப்பை ராகு பகவான் ஏற்படுத்துவார். திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். வேலை வாய்ப்பும் உருவாகும்.
நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது ஒரு விசயத்தில் தான் அது உங்களின் தந்தையின் நலன் பாதிக்கப்படும். தந்தைக்கு ஏதாவது சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.
பூர்வீக சொத்தை விற்று வேறு இடத்தில் சென்று வீட்டை கட்டலாம் என்ற எண்ணம் தோன்றும். உயர்கல்வி வாய்ப்பு தேடிவரும். வேலையில் இடமாற்றம் ஏற்படும்.
கேதுவின் பலன்கள்
உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்து வந்த கேது பகவான் இப்பொழுது பெயர்ச்சியாகி மூன்றாவது வீட்டிற்க்கு வருகிறார். உங்களின் தாயாரின் உடல்நிலை தேறிவிடும். உங்களின் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கை ஏற்படும். எதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றும். சொந்தமாக வீடு கட்டும் திட்டம் கைகூடும். வருட பாதியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
ராகு ஒரு சில தடைகளை ஏற்படுத்தினாலும் கேது அதனை முறியடித்து வெற்றி வாகை சூட செய்வார் உங்களுக்கு இது நல்ல காலம் என்றே சொல்லும் அளவிற்க்கு கேது பகவான் உங்களுக்கு நல்லது செய்ய உள்ளார்.
நண்பர்களே கோச்சார பலன்கள் ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் சுயஜாதகங்களின் நிலையை அறிந்து தான் நடைபெறும் நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள் கிரகங்களுக்கு மேலை ஒருவன் இருக்கிறான் அவனை நம்புங்கள் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் விலகிவிடும்.
நண்பர்களே கோச்சார பலன்கள் ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் சுயஜாதகங்களின் நிலையை அறிந்து தான் நடைபெறும் நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள் கிரகங்களுக்கு மேலை ஒருவன் இருக்கிறான் அவனை நம்புங்கள் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் விலகிவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment