வணக்கம் நண்பர்களே!
11-12-12 அன்று குபேர கிரிவலம் என்பதால் திருவண்ணாமலை சென்று வந்ததை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள இப்பதிவு. கடந்த வருடம் சென்று வந்ததை நமது பதிவில் எழுதியிருந்தேன்
அதனை பார்த்து பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள் அதனால் இந்த வருடம் சென்று வந்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று எழுதுகிறேன்.
நான் ஒரு செய்தியை பார்த்து அதனை கடைபிடிக்க ஆரம்பித்தால் அதனை தொடர்ந்து கடைபிடிப்பது எனது வழக்கம் என்னால் முடிந்தளவுக்கு அதனை கடைபிடிப்பேன் அப்படிதான் இந்த குபேர கிரிவலமும். இப்படி கடைபிடிப்பதால் தான் எனக்கு ஆண்டவன் பல வாய்ப்புகளை உருவாக்கி தருகிறான்.
எனக்கு குருநாதர் கிடைத்ததும் இந்த மாதிரி ஒரு விசயத்தை எடுத்துவிட்டால் என்னால் முடிந்தளவு போராடுவேன் அதனால் தான் எனக்கு நல்ல குரு கிடைத்தார். நீங்கள் என்ன செய்வீர்கள் முக்கால் அடி தாண்டுவது அத்துடன் திரும்பிவிட்டுவிட்டு அடுத்ததை பார்ப்பது இந்த மாதிரி இருந்தால் ஒரு நாளும் முழுவதுமாக தாண்டமுடியாது.
நேற்று அதிகாலை எழுந்து பஸ்ஸில் சென்று விடலாம் என்று நினைத்து 5 மணிக்கெல்லாம் பூஜையை முடித்து எழுந்தேன் எனது செல்போனில் ஒரு போன்கால் வந்தது அதனை எடுத்து பேசினேன் எனது நேரிடையான சோதிட வாடிக்கையாளர் எனது நண்பர் பேசினார் நாங்கள் உங்களுக்கு கார் வசதி செய்துள்ளோம் உங்களுடன் நாங்களும் வருகிறோம் என்றார் உடனே அதற்கு நானும் ஏற்றுக்கொண்டு காலை பத்துமணியளவில் காரில் என்னுடன் சேர்ந்து ஏழு பேர் சென்றோம்.
சிங்கபெருமாள் கோவிலில் நிறுத்தி மஞ்சள் துண்டு வாங்கவேண்டும் என்று எனது நண்பர் சொன்னதால் அங்கு ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றோம் அதன் பெயரை நான் கவனிக்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் திடீர் என்று அந்த கடைக்கு சென்றது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது இத்தனை கடைகளுக்கு செல்லாமல் இந்த கடைக்கு செல்வது ஏன் என்று என் மனம் நினைத்தது.
கடையின் உள்ளே சென்றேன். வாசலில் அழகாக கோலம் போட்டு வைத்திருக்கிறார்கள் உள்ளே சென்று பார்த்தால் அழகான தெய்வங்களின் படங்கள் மற்றும் எந்திரங்கள் அங்கு இருக்கின்றன. நாம் எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் சக்தியை அடையாளம் கண்டுக்கொண்டுவிடுவோமே நான் நினைத்தற்க்கும் அந்த கடையில் இருக்கும் தெய்வீக சக்தியும் சரியாக இருந்தது. அதனை காட்டிக்கொடுத்தது என்னிடம் இருக்கும் சக்தி இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் வியாபாரத்திற்க்கு நமது மதத்தில் உள்ள நல்ல விசயங்களை பயன்படுத்துகிறார்களே இதை போல் நீங்களும் பயன்படுத்துங்கள் என்பதற்க்காக தான் இதனை நான் சொல்லுகிறேன்.
காரை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை அடையும் போது 1:15 மணியானது. சாப்பாட்டை முடித்துக்கொண்டு அண்ணாமலையாரை தரிசிக்க கோவிலில் உள்ளே அமர்ந்திருந்தோம். சரியாக 4 மணியளவில் நடை திறந்தார்கள் உள்ளே சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்துவிட்டு வெளியில் வரும் போது பிரதோஷம் என்பதால் நந்திக்கு அபிஷேகம் நடந்தது அதனை தரிசித்துவிட்டு குபேர லி்ங்கத்திற்க்கு சென்றோம்.
குபேர லிங்கத்தை தரிசித்துவிட்டு 6 மணியளவில் கிரிவலம் செல்ல ஆயத்தமானோம். அப்பொழுது நமது தளத்தின் வழியாக அறிமுகமான நண்பர் ஜெயமோகன் 6 மணியளவில் குபேர லிங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார் அவரையும் அழைத்துக்கொண்டு கிரிவலம் சென்றோம்.
நண்பர் ஜெயமோகன் யோகாவிலும் தியானம் செய்வதிலும் பல வருடங்கள் ஈடுபட்டவர் தற்பொழுது வராகி உபசாகராக மாறுவதற்க்கு பயிற்சி எடுத்துக்கொண்டு உள்ளார். நல்லவர் நல்ல ஆன்மீக தாகம் உள்ளவர். ஏன் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்றால் தேடுதல் உள்ளவர்களுக்கு இறைவன் துணை நிற்பான். தேடுதல் கடுமையாக இருக்கும்போது மட்டுமே நல்ல குரு கிடைப்பார் என்னிடம் அவர் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை அவரின் சுயமுயற்ச்சியால் கற்றுக்கொண்டு உள்ளார்.
ஆன்மீகத்தை பொருத்தவரை தேடுதல் அதிகமாகும் போது மட்டுமே ஆன்மீக கதவு திறக்கும் சும்மா உட்காருந்து கொண்டு அது கிடைக்கும் இது கிடைக்கும் என்று இருந்தால் ஒன்றுமே கிடைக்காது.
கிரிவலத்தை முடித்துக்கொண்டு இரவு 2 மணியளவில் சென்னையை வந்து அடைந்தோம். எனக்கு தெரிந்து நமது தளத்தின் வழியாக மூன்று பேர் வந்து இருந்தார்கள். எனது நேரிடையான வாடிக்கையாளர் பத்து பேர் வந்திருந்தார்கள்.
நான் எங்கு சென்றாலும் தனியாக செல்லுவது தான் எனது பழக்கம் இந்த முறை மட்டுமே இத்தனை பேருடன் சென்று வந்துள்ளேன். என்னை நம்பி வந்த அனைவரையும் நல்ல நிலையில் உயர்த்த வேண்டும் என்று என் மனது நினைத்தது அதனை அடுத்த வருடத்திற்க்குள் செய்து முடித்து கொடுத்துவிடவேண்டும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டுள்ளேன். இறைவன் கருணை காட்டுவான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment