Followers

Wednesday, December 12, 2012

ராகு-கேது பெயர்ச்சி : மேஷம்



வணக்கம் நண்பர்களே !
                    இப்பதிவில் மேஷத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்

ராகுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து வந்த ராகு பகவான் தற்பொழுது ஏழாம் வீட்டிற்க்கு வந்துள்ளார். களத்திர வீட்டில் ராகு அமர்வதால் உங்களின் துணைவருடன் கருத்து மோதல் ஏற்படும். அவருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உடல் நிலையில் ஏதாவது பிரச்சினை என்று வந்தால் உடனே மருத்துவரை பார்ப்பது அறுவைசிகிக்சையில் இருந்து காப்பாற்றிக்கொள்ளலாம். கூட்டுதொழில் இந்த நேரத்தில் தொடங்கவேண்டாம். கூட்டுதொழில் நீங்கள் செய்துக்கொண்டு இருந்தால் உங்களி்ன் தொழில் கூட்டாளியை நன்கு உற்று நோக்குவது தேவையற்ற பிரச்சினைகளை குறைக்கும்.

கேதுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்து வந்த கேது பகவான் தற்பொழுது உங்களின் ராசியிலேயே அமருவதால் ஏதோ நோய் வருவதுபோல் உங்களின் மனதில் நினைக்க தோன்றும். குழப்பமான மனநிலை ஏற்படும். பணப்பற்றாக்குறை ஏற்படும். பயணச்செலவு அதிகம் வைக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவேண்டும். 


நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: