வணக்கம் நண்பர்களே !
என்னிடம் பல நண்பர்கள் கேட்டார்கள் மந்திரங்களை கொண்டு பல கோடிகளை சம்பாதிக்கலாமா
நண்பர்களே உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். இன்று ஆன்மீகத்தில் இருப்பர்கள் தான் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாட்டு்டன் இருக்கும் போது உங்களை தேடி பணம் வரும்.
என்னை பொருத்தவரை நான் அதிகமாக சம்பாதிக்க நினைப்பது கிடையாது தேவை ஏற்பட்டால் தான் பணத்தை சம்பாதிப்பேன். பணத்தை ஈட்டுவதற்க்கு எனக்கு பல வழிகள் இருக்கின்றன ஆனால் எதையும் நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவன். இப்பொழுது பல பணக்காரர்கள் என்னை தேடிவருவது எப்படியாவது எதையாவது கற்று தருவான் இதனை வைத்து இன்னும் பல கோடிகளை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் தேடி வருகிறார்கள்.
ஒரு நண்பர் கேட்டார் நீங்கள் ஒரு சக்தியை உரு ஏற்றியபிறகு ஏன் கஷ்டப்பட்டேன் என்று சொல்லியுள்ளீர்கள் அந்த சக்தி உங்களை காப்பாற்றவில்லையா என்று கேட்டார். நான் பல நாட்கள் காடுகளில் இருக்கும் போது சாப்பாட்டிற்க்கு கஷ்டம். அப்பொழுது எனக்கு எந்தவித தொந்தரவும் எனக்கு என் உடல் செய்தது இல்லை அதனால் தான் அவ்வாறு சொன்னேன். என்னை பொருத்தவரை நீங்கள் ஒரு சக்தியை முறைப்படி எடுத்துவிட்டால் உங்களுக்கு போதுமான உதவியை அதுவே செய்யும்.
ஒரு சாப்ட்வேர் இன்ஜீனியர் சம்பாதிப்பதை விட பலமடங்கு சம்பாதிக்கமுடியும் அதற்கு உங்களுக்கு நல்ல திறமை இருக்கவேண்டும். ஒரு நாளில் கூட இதனை சம்பாதிக்கமுடியும் என்பதை மனதில் வையுங்கள்.
நீங்கள் நன்றாக சோதிடம் பார்க்க தெரிந்தாலே அதில் கூட நன்றாக சம்பாதிக்கமுடியும் இதனை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆன்மீகம் செல்வம் சேமிப்பதற்க்கு எதிரி கிடையாது செல்வத்தை பெருக்கும் வழியை அது தரும் என்பதை மனதில் வையுங்கள்.
நீங்கள் பங்கு வர்த்தகத்தில் சோதிடத்தை பயன்படுத்தி முதலீடு செய்யும் போது நீங்கள் நல்ல லாபத்தை பார்க்கலாம் உங்களை உயர்த்த ஆன்மீகம் துணை செய்யும் என்றைக்கும் உங்களை தாழ்த்திவிடாது. உங்களை வீழ்த்துவது எப்போது என்றால் தவறான வழிகளை ஆன்மீகத்தில் செய்யும் போது வீழ்த்திவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
மந்திர பயிற்சி எவ்வாறு செய்வது தயவு செய்து கொஞ்சம் விளக்கம் சொல்வீர்களா?
Very good posting sir. Thanks
/* sri said...
மந்திர பயிற்சி எவ்வாறு செய்வது தயவு செய்து கொஞ்சம் விளக்கம் சொல்வீர்களா? */
வணக்கம் நண்பரே இதை தானே பல பதிவுகளில் எழுதி உள்ளேன் அதனை படித்து பாருங்கள்
//* KJ said...
Very good posting sir. Thanks *//
நன்றி நண்பரே
Post a Comment