வணக்கம் நண்பர்களே !
இப்பதிவில் கன்னியை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்.
ராகுவின் பலன்கள்
உங்களின் ராசிக்கு மூன்றாவது வீட்டில் இருந்த ராகு பகவான் தற்பொழுது பெயர்ச்சியாகி இரண்டாவது வீட்டிற்க்கு வருகிறார். தன ஸ்தானம் எனும் சொல்லக்கூடிய இரண்டாவது வீட்டில் ராகு இருப்பதால் தனவரவு திடீர் என்று வரும் அதைபோல் பணம் கையை விட்டும் செல்லும் நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும். பேச்சில் கவனம் தேவை கண்ட இடங்களில் சாப்பிடகூடாது. உடல் நிலையிலும் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதத்தை செய்யாதீர்கள்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் பணவரவில் எச்சரிக்கை தேவை. திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும் காலம் இது. வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களின் தொழிலை விரிவுபடுத்தலாம்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் பணவரவில் எச்சரிக்கை தேவை. திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும் காலம் இது. வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களின் தொழிலை விரிவுபடுத்தலாம்.
கேதுவின் பலன்கள்
உங்களின் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் இருந்த கேது பகவான் தற்பொழுது பெயர்ச்சியாகி எட்டாவது வீட்டிற்க்கு வருகிறார். வாகனங்கனை கையாளும்போது எச்சரிக்கை அவசியம். உங்களின் துணைவரிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்களுக்கு பாட்டி இருந்தால் அவர்களின் நலனில் அக்கறை காட்டவேண்டும்.
கூட்டுத்தொழில் செய்பவர்கள் உங்களின் தொழில் கூட்டாளி நிறுவனத்தின் கணக்களை கையாண்டால் எச்சரிக்கை தேவை. பணஇழப்பிற்க்கு வழி உண்டு. குடும்பத்தினருடன் பேசும் போது விட்டுக்கொடுத்து பேச வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments:
Post a Comment