வணக்கம் நண்பர்களே!
இரண்டு நாட்களாக பதிவு எழுதமுடியவில்லை ஞாயிறு அன்று காலை முழுவதும் சொந்த வேலை மதியம் நண்பர் ஒருவருடன் சந்திப்பு திங்கள் அன்று எனது குருவுடன் இருந்ததால் பதிவு எழுதுமுடியவில்லை.
கேது பகவான் பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் அதிகபட்சமாக என்ன சொல்லுவோம் ஞானகாரகன் பனிரெண்டில் இருந்தால் உங்களுக்கு இனிமேல் பிறவி இல்லை என்று சொல்லுவோம்.
கேது பனிரெண்டில் அமர்ந்தால் அதிகமாக அவர்களை ஆன்மீக யாத்திரை செய்ய வைப்பார். இந்த இடத்தில் ஒரு கேள்வி மனதில் தோன்றும் என்ன என்றால் எதற்கு யாத்திரை செல்ல வேண்டும். இப்பொழுது கோவில்களுக்கு யாத்திரை செல்லுவதை பார்த்தால் ஏதோ இன்பசுற்றுலா செல்லுவது போல் நாம் செல்லுகிறோம் அதே நேரத்தில் இந்த யாத்திரையில் எப்படி எல்லாம் இன்பமாக இருக்கமுடியுமோ அப்படி எல்லாம் இன்பத்தை அனுபவிக்கிறோம். இப்படி யாத்திரை செல்லுவதால் ஒரு பயனும் ஏற்படபோவதில்லை. இதில் சாமியார்களும் விதிவிலக்கல்ல அவர்களும் முடிந்தளவுக்கு சொகுசு வண்டியில் பயணம் செய்து யாத்திரையை முடிக்கிறார்கள். இன்று வசதி வாய்ப்பு இருப்பதால் அதனை பயன்படுத்திகிறோம் என்று சொல்லலாம். அதனை விட்டு விட்டு யாத்திரையின் நோக்கம் என்ன என்று பார்த்துவிடலாம்.
இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் யாத்திரை செல்லும் போது அந்த யாத்திரை இடங்களை நமக்கு முன் பல ஞானிகள் அந்த இடத்தை தரிசித்து இருக்கிறார்கள் அவர்களின் புண்ணியம் நமக்கு கிடைக்கும். ஏன் என்றால் அவர்களின் ஆத்மா புண்ணியஆத்மாவாக அந்த இடத்தை அலங்கரிக்கிறது அவர்களின் புண்ணியம் நமக்கு கிடைக்கிறது. அவர்கள் குளித்த தீர்த்தத்தில் நீங்கள் குளிக்கும் போது அவர்களின் ஆத்மா உங்களை ஆசிர்வதிக்கும் இப்படி பல இடங்களுக்கு நீங்கள் செல்லுவதால் உங்களுக்கு கிடைப்பது தான் ஆத்மாஞானம்.
ஆத்மாஞானத்தை வைத்து தான் நீங்கள் ஆன்மீகவாழ்க்கையில் முன்னேறமுடியும். நீங்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லும் போது உங்களோடு நல்ல விசயஞானம் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு செல்லுங்கள் அப்பொழுது உங்களுக்கு எளிதாக அனைத்தும் கிடைக்கும்.
நீங்கள் தியானம் யோகாவை செய்கிறோம் வேறு எதற்கு இப்படி எல்லாம் செல்லவேண்டும் என்று நினைத்தால் அது தான் அறியாமை. யோகா தியானம் மட்டும் செய்தால் ஒன்றும் நடந்துவிடாது இப்படி பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லும்போது மட்டுமே உங்களின் சக்தியை அதிகரிக்கமுடியும். என்ன நண்பர்களே ஆன்மீக யாத்திரை செல்வீர்களா?
கேது பகவான் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும்போது அவர்களை பல ஆன்மீகஸ்தலங்கள் மற்றும் தீர்த்தயாத்திரை எல்லாம் செய்யவைப்பார்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Hi sir, useful post ... For me kethu at 12th place with suriyan and sukran. What would be the effect of this.
Thanks,
sathishkumar GS
Post a Comment