வணக்கம் நண்பர்களே !
க்ஷமா என்ற ஒரு வார்த்தை சமஸ்கிருதத்தில் இருக்கிறது அதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
க்ஷமா என்றால் என்ன?
பிறருக்குக் கெடுதி நினைப்பது, தீங்கு செய்வது, பொருளை அபகரிப்பது ,அவமானம் செய்வது, தாக்குவது, கடுமையாகப் பேசுவது, திட்டுவது, பழிப்பது, கோள் சொல்வது, தீ வைப்பது, விஷம் கொடுப்பது, கொல்லுவது, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அழிவை உண்டாக்குவது முதலிய எவ்வளவு குற்றங்கள் உள்ளனவோ அவற்றில் ஒன்றையோ பலவற்றையோ கைக்கொண்டு நமக்கு தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவரை எதிர்த்துப் பழிக்குப்பழி வாங்க நமக்கு திறமை இருந்தாலும் கூடப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதுகூட இல்லாமல் இருப்பது ஐயோ பாவம் இந்தக் குற்றத்திற்க்கு இவ்வுலகிலோ பரலோகத்திலோ எதிரிக்கு தண்டனை கிடைக்க வேண்டாம் என்று நினைப்பது இதுதான் க்ஷமா (பொறுமை).
நம்ம ஆள்கள் இப்பொழுது இப்படி இருக்கிறார்களா என்று பார்த்தால் கண்டிப்பாக ஒருவர் கூட தேறுவது கஷ்டம் தான் ஏன் அவ்வாறு சொல்லுகிறேன் என்றால் பழிக்கு பழி வாங்குவது தான் முதல் வேலையாக இருக்கிறது.
மனிதனின் என்று இருந்தால் கண்டிப்பாக அவனுக்கு கோபம் இருக்கதான் செய்யும். கோபம், காமம் அதிகமாக இருப்பவர்கள் தான் படைப்பாளியாக மாறமுடியும். யாருக்கு கோபம் இருக்கிறதோ அவரால் பல நல்ல செயல்கள் செய்யமுடியும் இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் அவரிடத்தில் தான் அதிக சக்தி இருக்கிறது ஆனால் அந்த சக்தியை சரியான ஆக்கபூர்வமான வழியில் திசை திருப்ப வேண்டும்.
மனிதனின் என்று இருந்தால் கண்டிப்பாக அவனுக்கு கோபம் இருக்கதான் செய்யும். கோபம், காமம் அதிகமாக இருப்பவர்கள் தான் படைப்பாளியாக மாறமுடியும். யாருக்கு கோபம் இருக்கிறதோ அவரால் பல நல்ல செயல்கள் செய்யமுடியும் இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் அவரிடத்தில் தான் அதிக சக்தி இருக்கிறது ஆனால் அந்த சக்தியை சரியான ஆக்கபூர்வமான வழியில் திசை திருப்ப வேண்டும்.
இயற்கையாகவே கடலை நோக்கிச் செல்லும் நதியின் ஓட்டத்தை நிறுத்த முடியாதோ அதுபோல எல்லா உயிரினங்களும் தத்தம் இயற்கைக்கு ஏற்றவாறு நடந்து கொள்கின்றன இயற்கையான போக்கில் இழுக்கப்பட்டுச் செல்லுகின்றன எந்த ஒரு மனிதனும் பிடிவாதமாக ஒரு வேலையும் செய்யாமல் இருக்க முடியாது. இதுபோல தான் கோபம் உருவாகிக்கொண்டு தான் இருக்கும் அணைகட்டி ஆற்றின் போக்கை வேறு திசையில் திருப்புவது போல மனிதனும் தனது கோபத்தை திசை திருப்ப வேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களின் கோபம் ஆக்கபூர்வமாக செயல்படும்.
என்னை பொருத்தவரை என்னிடம் இருக்கும் நண்பர்கள் அனைவரும் அதிக கோபபட்டவர்கள் தான் அவர்களை என் நண்பர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களை திசை திருப்பினேன் இன்று அனைவரும் ஆக்கபூர்வமாக சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.கோபத்தை கட்டுபடுத்த வேண்டியதில்லை அதனை மாற்ற வழியை செய்யவேண்டும் இதனை எல்லாம் உங்கள் குரு சொல்லிக்கொடுப்பார்.
அப்ப நீங்கள் எப்பொழுது ஆக்கபூர்வமாக சிந்திக்க போகிறீர்கள்?
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment