வணக்கம்!
இந்த கருத்தைப்பற்றி நான் ஏற்கனவே ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். இதனை செய்ய தற்பொழுது காலம் வருவதால் மறுபடியும் உங்களுக்கு ஞாபகத்திற்க்கு வருவதற்க்கு சொல்லுகிறேன்.
தீபாவளி காலத்தில் ஆடை தானத்தைப்பற்றி சொல்லிருக்கிறேன். வரும் தீபாவளிக்கு நீங்கள் முடிந்தளவு பிறர்க்கு ஆடையை தானமாக அளிக்கலாம். இல்லாதவர்கள் என்று கிடையாது இருப்பவர்களுக்கு கூட இதனை நீங்கள் செய்யலாம்.
ஒருவர்க்கு ஆடை தானம் செய்யும்பொழுது அதன் வழியாக நமக்கு நிறைய செல்வவளம் கிடைக்கிறது என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. பிறர்க்கு பண்டிக்கை காலத்தில் நாம் இப்படி உதவி செய்யும்பொழுது அந்த காலத்தில் எல்லாேரும் மகிழ்ச்சியோடு இருக்கும்பொழுது அவர்களும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இந்த மகிழ்ச்சிக்கு இவர் காரணமாக இருக்கும்பொழுது அவர்களுக்கு ஒரு ஆத்மா வழியாக நல்ல ஆசி கிடைக்கிறது.
தீபாவளிக்கு உதவதற்க்கு தற்பொழுது இருந்து அதற்கு தயாராக இருப்பீர்கள் என்று சொல்லுகிறேன். தீபாவளிக்கு தான் நாம் செய்யவேண்டும் என்பதில்லை எப்பொழுதும் இதனை செய்யலாம். உங்களிடம் குறைவான பணம் தான் இருக்கின்றது என்றால் கூட அதற்கு தகுந்தார்போல் ஆடை வாங்கிக்கொடுங்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Miga miga nalla karuthu.
Post a Comment