Followers

Wednesday, October 21, 2015

பெரியாேர்களும் பாக்கியஸ்தானமும்


வணக்கம்!
         பாக்கியஸ்தானத்தை காட்டும் ஒன்பதாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒரு கருத்தைப்பற்றி பார்க்கலாம். ஒன்பதாவது வீடு ஒருவர்க்கு நன்றாக இருந்தால் அவர் பெரியாேர்களை நன்றாக மதிப்பார்.

இன்றைய காலத்தில் பெரியோர்களை மதிப்பது எல்லாம் நூற்றுக்கு பத்து பேர் இருக்கலாம். பெரியாேர்களை வீட்டிலேயே வைப்பது கூட கிடையாது அவர்களை வெளியில் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். திருமணம் முடிந்த கையோடு முதலில் செய்யும் வேலை அவர்களின் பெற்றோர்களை விட்டுவிட்டு நீ வந்துவிடு என்று தான் பெரும்பாலும் பெண்களின் கட்டளையாக இருக்கின்றது.

பாக்கியஸ்தானம் சொல்லும் சேதி உங்களை விட ஒரு நாள் மூத்தவர் என்றாலும் அவர்களை மதிக்கவேண்டும் என்று சொல்லுகின்றது. நம்மில் எத்தனை பேர் இப்படி மதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை ஆனால் நான் பெரும்பாலும் மதிப்பது உண்டு.

ஜாதககதம்பத்தில் இருந்து வரும் என்னை விட பெரியோர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பேன். ஏன் அவர்களை மதிக்கிறேன் என்றால் நம்மை விட இந்த பூமிக்கு முன் வந்தவர்கள் அவர்களின் அனுபவம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் நான் மதிப்பது உண்டு. பாக்கியஸ்தானத்தைப்பற்றி எல்லாம் எனக்கு சோதிடத்தை பார்க்க ஆரம்பித்தபிறகு தான் தெரியும் ஆனால் என்னுடைய பழக்கமாக அதனை வைத்திருந்தேன்.

பெரியோர்களை மதித்தால் பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும் என்பதை நான் அனுபவரீதியாக பார்த்து இருக்கிறேன். இன்றைய காலத்தில் பெரியோர்களும் அதற்கு தகுந்தார்போல் நடப்பது இல்லை என்ற குற்றசாட்டையும் நான் ஏற்றுக்கொள்வேன். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை மற்றும் பொதுவான பழக்கவழக்க அறிவு எல்லாம் அவர்களை சிறுபிள்ளைதனமாக நடத்தசொல்லுகிறது. பெரியோர்களை மதிக்காததற்க்கு பெரியோர்களும் ஒரு சில இடத்தில் காரணமாக அமைந்துவிடுகிறார்கள். இதனை தவிர்த்தால் நல்லது. 

நம்மைவிட ஒரு நிமிடம் முன்னர் பிறந்து இருந்தால் அவர்களை மதித்தால் பாக்கியஸ்தானம் நன்றாக பலம்பெறும். பாக்கியஸ்தானம் பலம்பெறும்பொழுது நமக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment: