வணக்கம்!
ஒவ்வொருவரும் ஒரு நிலையை அடையவேண்டும் என்று போராடிக்கொண்டு இருப்பார்கள். உழைப்பை வைத்து அதனை அடையவேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலருக்கு அதுவாகவே அமையும்.
உழைப்பு என்பது மிகப்பெரிய ஒன்று தான் ஆனால் சமுதாயத்தில் ஒரு சிலருக்கு அந்த உழைப்பை விட லக் அடித்து மிகப்பெரிய உச்சிற்க்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் உழைத்தும் அந்த இடத்திற்க்கு செல்வதற்க்கு சிரமப்படுகிறார்கள். இது அனைத்தும் அவர் அவர்கள் வாங்கி வந்த வரம் என்று சொல்லுவார்கள்.
ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் என்பது அவர்களின் ஜாதகத்திலேயே அமைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு அமைவதில்லை. இதனை படிக்கும் உங்களுக்கு சோதிடம் நன்றாக தெரியும். அதில் திருமணத்தை காட்டும் ஏழாம் வீடு முக்கால்வாசி பேருக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்றும் உங்களுக்கு தெரியும். கெட்டுபோய் இருந்தாலும் எப்படியாவது திருமணத்தை நடத்துவதில்லையா அதைபோல் இந்த அதிர்ஷ்டத்தையும் நாம் முயற்சி செய்து எடுத்துக்கலாம்.
என்னங்க விளையாடுகின்றீர்களா என்று கேட்க தோன்றும் உண்மை தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஆன்மீக வழியில் உழைக்கவேண்டும். ஒரு கோடி லாட்டரி சீட்டை வாங்க வைப்பது பூர்வபுண்ணியம் அது அடிக்கவேண்டும் என்றால் பாக்கியஸ்தானம் முடிவு செய்யவேண்டும். அதிர்ஷ்டமும் அப்படி தான் பாக்கியஸ்தானத்தின் வழியாக அதனை நாம் அடைந்துவிடலாம்.
எப்படி அடைவது?
பாக்கியஸ்தானம் எதனை காட்டுகிறது நாம் வணங்கும் தெய்வம் மற்றும் வழிபாடுகளை காட்டுகிறது அல்லவா. நாம் சிவ வழிபாட்டை வைராக்கியதோடு செய்தோம் என்றால் நாம் நினைக்கும் பெரிய விசயம் நம் கைக்கு கிட்டும்.
பெரிய அளவில் நீங்கள் வரவேண்டும் என்றால் சிவவழிப்பாட்டை தான் செய்யவேண்டும். தொடர்ந்து வைராக்கியதோடு செய்யும்பொழுது நாம் அதனை அடைந்துவிடலாம். சிவன் நினைத்தால் பெரிய காரியத்தை எளிய வழியில் உங்களுக்கு நடத்திக்கொடுப்பார். வழிபாட்டிற்க்கும் உழைக்கவேண்டும். வழிபாட்டில் உழைத்தால் அதிர்ஷ்டத்தை பெறலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Sollitteengalla Ini nanga sivan kovilukku urundukonde poividuvom.
Post a Comment