வணக்கம்!
ஐம்பது வயதிற்க்கு மேல் அதிகமாக குடும்பத்தோடு ஈடுபாடு காட்ட கூடாது. அந்த நேரத்தில் ஆன்மீகத்திற்க்கு பக்கம் அதிகம் ஈடுபாடு காட்டவேண்டும்.
பல பேர்களை பார்த்து இருக்கிறேன். அவர்களின் வாரிசு ஐம்பது வயது வந்தால் கூட அவர்களை வைத்து அவர்களின் குடும்பத்தை கவனிக்க சொல்லுவதில்லை. அவர்கயே இழுத்துபோட்டு வேலையை செய்துக்கொண்டு இருப்பார்கள்.
ஐம்பது வயது கூட கிடையாது அதற்கு குறைவாகவே ஆன்மீகத்திற்க்கு நாட்டம் காட்டி கோவில் குளங்கள் மற்றும் ஆசிரத்தை தேடி செல்லவேண்டும். இந்த வாழ்க்கையை இளம்வயதில் செம்மையாக செய்துவிட்டால் செல்லுகின்ற பாதைக்கு வழி வகுக்கலாம். இந்த வாழ்க்கையை குடும்பத்திற்க்கே செலவு செய்தால் வாழ்ந்த வாழ்க்கை வீண் என்றாகிவிடும்.
இளம்வயதில் அனைத்தையும் செய்துவிடவேண்டும். குடும்பத்திற்க்கு தேவையான விசயங்களை செய்துவிட்டு குடும்ப உறுப்பினர் உங்களின் வாரிசாக தேர்ந்தெடுத்துவிட்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு ஆன்மீகபக்கம் தலைசாத்திவிடவேண்டும். உங்களின் குடும்பத்தில் இருந்தால் கூட இந்த வாழ்க்கை நிரம்தரம் இல்லை என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார்போல் செயல்பாடு இருக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment