வணக்கம்!
பாக்கியஸ்தானத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு சில குடும்பங்களில் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் நபர் சரியாக தன் கடமையை செய்வார். ஒரு சில குடுபங்களில் தந்தையார் எதுவும் செய்யாமல் இருந்துவிடுவார்.
இன்றைய காலத்தில் தான தர்மம் செய்பவர்கள் எல்லாம் குறைவாக தான் இருப்பார்கள். முக்கால்வாசிபேர் கஷ்டப்படுவதற்க்கும் இது ஒரு காரணமாக தான் இருக்கும். நாம் ஒரு சிலரிடம் கடைசி வரை தான தர்மத்தை செய்துக்கொண்டே வந்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு.
தான தர்மம் செய்வது நமக்கு உடனே நல்லது நடக்கும் என்பது கிடையாது. நமக்கோ அல்லது நமது வாரிசுக்களுக்கோ நல்லது நடக்கும். என்னிடம் இருக்கும் தொழில் செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் பாக்கியஸ்தானத்திற்க்கு என்று அதிகம் செலவு செய்து அவர்களுக்கு நல்லதை நடக்க வைத்திருக்கிறேன்.
அம்மனை வைத்து நாங்கள் வேலை செய்தால் கூட இப்படிப்பட்ட நல்லதை செய்யும்பொழுது மட்டுமே மிக சரியாக அவர்களின் வாழ்க்கை செல்லும். நிரந்தர தீர்வும் அவர்களுக்கு ஏற்படும். அவர்களின் புண்ணிய கணக்கிற்க்கு வலு சேர்க்கும் விதமாக நாம் செய்யவேண்டும்.
ஒரு உண்மையை உங்களிடம் சொல்லுகிறேன். இன்றைய தேதியில் நான் வாங்கும் பணம். வாங்கிய பணம் எல்லாம் என்னிடம் இருந்தால் பல கோடிகள் இருந்திருக்கும். நான் வாழ்வது சாதாரணமான ஒரு வாழ்வு. இதுவரை வாங்கிய பணத்தை எல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களுக்காக தான தர்மம் மற்றும் ஆன்மீக பணியில் உள்ளவர்கள் என்று அதிகம் பாக்கியஸ்தானம் சம்பந்தப்பட்ட விசயத்திற்க்கே செலவு செய்து இருக்கிறேன். நம்மை தேடி வருபவர்கள் நிரந்தரமாக நன்றாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் இப்படி செய்வது உண்டு.
பூர்வபுண்ணியம் என்பது நமக்கு கொடுத்துவிடும். பாக்கியஸ்தானம் கையெழுத்து போட்டால் தான் நாம் அதனை அனுபவிக்கமுடியும். பொதுவாக நாங்கள் அதிக பணம் வாங்கி செய்வது தற்பொழுது ஒருவர் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்காக அப்படி செய்வோம். நீங்கள் நன்றாக இருந்தீர்கள் என்றால் உங்களால் முடிந்த தான தர்மத்தை தொடர்ந்து செய்து வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment