Followers

Thursday, December 24, 2015

கேள்வி & பதில்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை படித்துவிட்டு ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். அதாவது பாக்கியஸ்தானத்தில் நீங்கள் சொல்லுவது போல் தர்மமே செய்துக்கொண்டு இருக்கமுடியுமா குடும்ப வாழ்க்கையில் இருந்துக்கொண்டு இது எல்லாம் சாத்தியப்படுமா என்று கேட்டார்.

ஒருவன் சம்பாதிக்கும் சம்பாதிக்கிற பணத்தில் பத்து சதவீதம் தன் மதத்திற்க்கு கொடுக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கின்றது. இதனை தசமகணக்கு என்று சொல்லுவார்கள். இந்து மதத்தில் மட்டும் இது கிடையாது. 

இல்லறவாழ்க்கை பிரம்மசரிய வாழ்க்கை என்ற இரண்டு வாழ்க்கையில் எது அதிக பிரச்சினையை சந்திக்கிறது என்றால் அது இல்லறவாழ்க்கை தான். இல்லறவாழக்கையில் பிரச்சினை அதிகம் வருகின்றது என்றால் அதற்கு தீர்வு நம்மால் எத்தனை நாள் தான் முடியும் என்று சமாளிக்கமுடியும் நம்மை மீறி ஒரு சக்தி நம்மை ஆட்டி படைக்கிறது என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்க்கு இந்த பாக்கியஸ்தானம் உதவுகிறது.

இன்றைய காலத்தில் நன்றாக கணக்கை போட்டு பார்த்தால் நம்மை மீறி பல செலவுகள் சம்பந்தமே இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கும்.  அதனை எல்லாம் பாக்கியஸ்தானத்திற்க்கு செலவு செய்தால் போதும். மிகப்பெரிய பணம் பாக்கியஸ்தானத்திற்க்கு நாம் செலவு செய்யலாம்.

தசமகணக்கு படி பத்து சதவீதம் வேண்டாம் அதில் பாதி ஒரு ஐந்து சதவீதம் எடுத்து செலவு செய்யலாமே. உங்களின் வாழ்வும் உங்களின் வாரிசும் நன்றாக இருக்க இந்த ஐந்து சதவீதம் உதவுமே. 

நீங்கள் தர்மம் செய்துக்கொண்டே இருக்கமுடியாது அந்தளவுக்கு பிஸியாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பாக்கியஸ்தானத்தை கவனிக்காமல் உங்களின் வேலையை மட்டும் கவனித்துக்கொண்டு இருந்தால் கொஞ்சகாலத்திற்க்கு பிறகு நீங்கள் பிஸியாக இருக்கமாட்டீர்கள். உங்களிடம் இருந்து அனைத்தும் சென்றுவிடும்.

கடவுள் இல்லை என்று பேசிக்கொள்பவன் கூட வெளியில் தெரியாமல் பாக்கியஸ்தான வேலையை செய்துக்கொண்டு இருப்பான். நல்ல வாழ்க்கை அமையவேண்டும் நமது வாரிசும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு இல்லறத்தில் இருப்பவர்களும் இந்த பாக்கியஸ்தானத்தில் சொல்லப்பட்ட கருத்தை மேற்க்கொண்டு வரவேண்டும்.

விரைவில் ஈரோடு அருகில் இருக்கும் பவானியில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: