வணக்கம்!
பாக்கியஸ்தான அதிபதியும் நான்காவது வீட்டு அதிபதியும் இரண்டும் நல்ல கிரகங்களாக இருந்தால் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை சுகப்போகமாக அமைந்துவிடும். இரண்டு கிரகங்களும் பகையாக இருந்தால் ஜாதகர் படும்பாடு அதிகமாக போய்விடும்.
பொதுவாக நான்காவது வீடு சரியில்லை என்றால் அதிகமான பிரச்சினையை சந்திக்கவேண்டியிருக்கும். பிரச்சினை என்றால் இருப்பதற்க்கு ஒரு வீடு கூட இல்லாமல் போய்விடும். சந்நியாசியாக தான் இருக்கவேண்டும்.
நான்காவது வீடு தான் தாயை காட்டும் இடம்.ஒன்பதாவது வீட்டு அதிபதியும் நான்காவது வீட்டு அதிபதியும் இணையும்பொழுது தாய் தந்தையர் உடனிருந்து நல்ல வாழ்க்கையை தன்னுடைய பெற்றோர்களால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அமைத்துக்கொடுத்துவிடுவார்கள்.
இரண்டும் பகையை தருகின்றது என்றால் தாய் தந்தையர் சண்டை சச்சரவால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பிரச்சினையை அதிகம் ஏற்படுத்திக்கொடுத்துவிடுவார்கள்.
ஒருவருக்கு ஒன்பதாவது வீட்டு அதிபதியும் நான்காவது வீட்டு அதிபதியும் இணைந்து குறிப்பிட்ட வயது வரை நல்லது செய்தாலே போதும் சம்பந்தப்பட்ட நபர் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும். இரண்டில் ஒன்று சரியில்லை என்றாலும் பல பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட ஜாதகர் அனுபவிக்க நேரிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment