வணக்கம்!
ஒரு இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அந்த திருமணம் நடைபெறும் இடத்தில் ஒரு பெண் இவர்கள் கெட்டுவிடவேண்டும் என்று நினைத்து தன்னுடைய மூக்கில் ஒரு குச்சியை எடுத்துவிட்டது. மூக்கில் குச்சியை விட்டவுடன் தும்மல் வரும். தும்மல் ஒரு அபசகுணம் என்பதால் திருமணம் நடைபெறும் தம்பதியர் நன்றாக வாழமாட்டார்கள் என்று நினைத்து இப்படி செய்தார் ஒரு பெண்.
பையனை பெற்ற அம்மையார் தாழியை எடுத்துக்கொடுக்கும்பொழுது தும்மினார் வாழவேண்டும் தூரத்தில் இருப்பவர் வாழவேண்டும் இடையில் இருப்பவர் வாழவேண்டும் என் மகனும் வாழவேண்டும் என்ற தாழியை எடுத்துக்கொடுத்து கட்ட சொன்னதாம் அந்த பையின் அம்மா.
தும்மலை வேண்டும் என்று வரவழைத்த பெண்ணும் வாழவேண்டும். தூரத்தில் இருப்பவரும் வாழவேண்டும். இடையில் இருப்பவர் என்றால் இந்த கல்யாணத்தில் இருக்கும் நபர்களும் வாழவேண்டும். என் மகனும் வாழவேண்டும் என்று வாழ்த்தி அது தாழியை எடுத்துக்கொடுத்த காரணத்தால் அந்த தாயின் மகன் நன்றாக வாழ்ந்தானாம். இது கிராமத்தில் சொல்லுகின்ற பழமொழி.
தற்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற பாக்கியஸ்தானும் இதனை தான் சொல்லுகின்றது. நம்மை கெடுத்தவர்களும் வாழவேண்டும். நாமும் வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் பாக்கியஸ்தானம் அள்ளிக்கொடுக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment