Followers

Thursday, December 31, 2015

நன்றி


வணக்கம்!
          2015 ஆம் ஆண்டு என்னால் முடிந்தளவுக்கு பதிவுகளை தந்து இருக்கிறேன். அதனை பொறுமையாக படித்து வந்தீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கின்ற காரணத்தால் குறைவான பதிவேயே தரமுடிந்தது. 

2015 ஆம் ஆண்டில் அம்மன் அருளால் நிறைய நண்பர்களின் நட்பு கிடைத்தது. வருடந்தோறும் ஏன் ஒவ்வொரு நாளும் கூட எனக்கு புதியவர் ஒருவராவது அறிமுகமாகிறார். அதற்கு காரணம் நீங்கள் தான். நமது ஜாதககதம்பத்தைப்பற்றி பல நண்பர்களுக்கு பரிந்துரை செய்வதால் இது நடக்கிறது.

இந்த ஆண்டில் தான் ஆன்மீகப்பயிற்சிக்கு என்று புதிய ஒரு தளத்தை உருவாக்கினேன். நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்கள் ஆன்மீகப்பயிற்சிக்கு என்று புதிய தளம் கட்டணசேவையோடு உருவாக்கப்பட்டது. 

2016 ஆம் ஆண்டில் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன். 2016 ஆண்டு பல புதிய விசயங்களோடு உங்களை சந்திக்கிறேன்.  
            புதிய வருடத்தை குடும்பத்தோடு மகிழ்வாக கொண்டாடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு