வணக்கம்!
ஒன்பதாவது வீட்டில் தீயகிரகங்கள் ஒரு பெண்ணிற்க்கு அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பெண் இளம் வயதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். தேவையில்லாத வம்பு வந்துவிடும். ஒன்பதில் இருக்கும் தீயகிரகம் படி தாண்ட வைத்துவிடும்.
உங்களின் மகளுக்கு அல்லது மகனுக்கு இப்படி இருந்தால் அதற்கு பரிகாரம் செய்யாமல் இருந்தால் கூட அந்த வீட்டை கோச்சார கிரகம் தாண்டுகிற வரை பொறுமையாேடு இருக்கவேண்டும்.
ராகு கிரகம் ஒன்பதாவது வீட்டில் பிறந்தபொழுது இருந்தால் அந்த வீட்டை கோச்சார ராகு கடக்கும் வரை நிதானமாக இருக்கவேண்டும். கோச்சார ராகு கடந்த பிறகு திருமணம் செய்யலாம்.
திருமணத்திற்க்கு மட்டும் இல்லை பல விசயங்களுக்கு இது உதவும். ராகு மட்டும் இல்லை எந்த ஒரு தீயகிரகமும் அப்படி தான் வேலை செய்யும்.
பொதுவாக பெரிய தோஷம் இருக்கும் ஜாதகத்தில் கூட சம்பந்தபட்ட கிரகம் கோச்சாரப்படி தாண்டவேண்டும். தாண்டிவிட்டால் அதன் பிறகு அந்தளவுக்கு வீரியம் இருக்காது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment