Followers

Thursday, August 11, 2016

கிரகத்தின் நல்ல சக்தி


ணக்கம்!
          ஒன்பது கிரகமும் பூமியில் தன்னுடைய சக்தியை கலந்து கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அப்படி கலந்துக்கொடுத்துக்கொண்டிருக்கும் சக்தி பிறக்கும்பொழுது எப்படி இருந்தது அதன்படி தான் அவர்களின் தலை எழுத்து அமைகிறது.

நமக்கு ஏதோ ஒன்று தேவைப்பட்டால் எப்படியாவது யாரையாவது பிடித்து நாம் அதனை பெற விளைகிறோம் அல்லவா அதுபோல தான் நமக்கு தேவைப்படுகின்ற கிரகத்தின் சக்தியையும் நாம் எப்படியும் பெற்றுவிடவேண்டும்

எப்படி நமக்கு ஒரு தெய்வத்தின் அனுக்கிரகம் தேவைப்பட்டால் அதன் கோவிலுக்கு சென்று வழிபட்டு எடுக்கிறோம் அதுப்போல் நமக்கு நல்ல கிரகத்தின் சக்தி தேவைப்பட்டால் அதனையும் நாம் பெறமுடியும்.

ஒவ்வொரு கிரகத்தின் சக்தி இந்த இடத்தில் அதிகம் இருக்கின்றது என்று தான் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் தனி தனி கோவில் அமைத்து இருக்கின்றனர். அந்த கோவிலுக்கு சென்று நாமும் வழிபட்டு வருகிறோம்.

.ஒரு கிரகத்திற்க்கு இரண்டு பக்கமும் இருக்கின்றது. நல்லது கெட்டது என்று இரண்டு பக்கம் இருக்கின்றது. தீய பக்கம் என்ற சொல்லக்ககூடிய சக்தி அதிகளவு வரும்பொழுது அந்த கிரகத்தால் நாம் கஷ்டப்படுகின்றோம். உண்மையில் அந்த கிரகத்தின் நல்ல சக்தியை தான் நாம் பெறவேண்டும்.

ஒரு கிரகத்தின் நல்ல சக்தியை பெறுவதற்க்கு என்ன வழி எல்லாம் இருக்கின்றதோ அந்த வழியை நாம் பின்பற்றலாம். அதோடு ஒவ்வொரு கிரகத்திற்க்கும் என்று இந்த மாதிரியான உணவு வகை என்று இருக்கும் அதனை சாப்பிட்டும் நமது உடலில் அந்த சக்தியை பெறலாம்.

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் என்று தனித்தனி பூஜை செய்து அந்த கிரகத்தின் நன்மையை எடுக்கலாம். முதலில் நாம் எந்த கிரகத்தின் சக்தியை பெறவிளைகிறோம் என்பதை முதலில் தீர்மானித்துவிடவேண்டும். ஜாதகத்தை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்க்கும்பொழுது தான் இது எல்லாம் தெரியவரும். உங்களின் ஜாதகத்தை எடுத்து கிரகம் எப்படி இருக்கின்றது என்று பார்த்து அதற்கு செய்யுங்கள். நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: