வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லிருக்கிறேன். அனுபவத்தில் நிறைய பார்த்த காரணத்தால் இதனை சொல்லுவது உண்டு.
சந்திரன் மட்டும் நன்றாக ஒருவருக்கு இருந்தால் அவருக்கு பணபற்றாகுறை இருக்காது என்று சொல்லுவார்கள். அதாவது அவருக்கு அடுத்தவர் பணம் கொடுத்து உதவுவார்கள்.
சந்திரன் நன்றாக இருந்தால் அவர் பிறரிடம் இருந்து கடன் கூட எளிதில் வாங்கிவிடுவார்கள். திருப்பிகொடுப்பார்களா என்று கேட்காதீர்கள் சந்திரன் நன்றாக இருக்கும் நபர்கள் கேட்டால் கிடைக்கும்.
சந்திரன் மறைவுஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் பணம் கிடைக்கும் அந்த பணம் நீண்ட நாள்கள் நிற்காது என்று சொல்லலாம். அதாவது கிடைத்த பணம் கொடுத்தவர்களே வாங்கிக்கொள்வார்கள்.
சந்திரன் வீக்காக இருக்கும் நபர்கள் எச்சரிக்கையோடு இருங்கள். நன்றாக இருக்கும் நபர்கள் கவலையை விடுங்கள் உங்களை தேடி எப்படியும் பணம் வந்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment