வணக்கம்!
இந்த உயிர் இருக்கும்வரை தான் இந்த உலகத்தில் உள்ளது எல்லாம். உயிர் போய்விட்டால் ஒன்றும் இல்லை. உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் நன்றாக இருந்தால் உங்களின் ஆயுள் கெட்டி என்று சொல்லிருக்கிறார்கள்.
ஆயுள்காரகன் என்று வர்ணிக்கப்படும் சனிக்கிரகம் உங்களின் ஜாதகத்தில் பலன் இல்லை என்றால் உங்களுக்கு ஆயுள் குறைவு. உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் பலன் குன்றி காணப்பட்டால் உடனே நீங்கள் பயப்படதேவையில்லை. ஆயுளை அதிகரிக்க அதற்கு என்று நீங்கள் முக்கியமாக செய்யவேண்டியது ஒன்று உள்ளது.
சனிக்கிழமை தோறும் நீங்கள் உடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளி்த்து வந்தால் உங்களின் ஆராேக்கியம் நன்றாக இருக்கும் அதோடு உங்களின் ஆயுளும் நன்றாக இருக்கும்.
இன்றைய காலத்தில் பலர் இதனை எல்லாம் மறந்துவிட்டனர் என்றே சொல்லலாம். ஜாதககதம்பம் படிக்கும் நண்பர்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிடுகிறார்கள். உங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதனை சொல்லுங்கள்.
நம்மால் ஒரு உயிர் பல வருடங்கள் வாழ வழி செய்வோம். வெள்ளிக்கிழமை தைலகுளியல் மற்றும் சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் நீங்கள் மறக்காமல் குளித்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment