வணக்கம்!
நாம் நிறைய சம்பாதிக்கவேண்டும் சம்பாதித்ததை ஒழுங்காக காலம் காலமாக இருக்கவேண்டும் என்றால் முதலில் கிரகங்கள் எப்படி இருந்தாலும் நமது மனம் கொஞ்சம் விசாலமாக இருக்கவேண்டும்.
விசாலம் என்றால் பரந்த மனமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன். ஒரு சிலர் கையில் பணம் இல்லாமல் இருப்பார்கள் ஆனால் நான் சம்பாதித்தவுடன் ஒருத்தருக்கும் ஒன்றும் தரகூடாது என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிக்கொண்டு இருப்பார்கள்.
குறு குறு என்று தன் மனதை மாற்றி வைத்துக்கொண்டு பெரியதற்க்கு ஆசைபடுவார்கள். மனதை விசாலப்படுத்தாமல் பெரியதற்க்கு ஆசைப்பட்டால் கிடைக்காது.
மனதை விசாலமாக வைத்துக்கொண்டு வாழ்வில் போராடுபவனுக்கு வெற்றி என்பது மிக அருகில் வந்துவிடும் என்பது நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.
கிரகநிலையில் இருந்து தான் மனிதர்களின் குணம் அமைந்தாலும் தன்னுடைய பழக்க வழக்கத்தால் நாளடைவில் கொண்டு வந்துவிடலாம். கிரகத்தை மீறி நம் மனதை பழக்கப்படுத்திவிட்டால் அனைத்தையும் வெற்றிபெற்றுவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment