Followers

Monday, August 8, 2016

குழந்தையும் தெய்வமும்


வணக்கம்!
          குழந்தையும் தெய்வமும் கொண்டாடினால் தான் உண்டு. கொண்டாடவில்லை என்றால் அது நம்மை கவனிக்காமல் சென்றுவிடும். ஒரு குழந்தையை நீங்கள் கொஞ்சினால் தான் அந்த குழந்தை உங்களை பார்த்து சிரிக்கும் உங்களோடு அன்போடு இருக்கும். 

குழந்தையிடம் அன்பை காட்டவில்லை என்றால் குழந்தை உங்களை கண்டுக்கொள்ளவே மாட்டாது அதுபோல தெய்வமும் அப்படிப்பட்டது தான். நீங்கள் வணங்கும் தெய்வத்தை நீங்கள் கும்பிடவில்லை என்றால் அது உங்களை கண்டுக்கொள்ளவே கண்டுக்கொள்ளாது.

தெய்வமும் குழந்தையும் ஒன்று. தெய்வத்தை எந்தளவுக்கு கொண்டாடுகிறோமோ அந்தளவுக்கு நம்மிடம் பிரியமாக இருக்கும். தெய்வத்தை நாம் கண்டுக்கொள்ளவில்லை என்றால் அது சென்றுவிடும்.

நான் நிறைய பூஜை என்று அடிக்கடி சொல்லுவது கூட இந்த மாதிரி தான் நாம் எந்தளவுக்கு அந்த தெய்வத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு தெய்வம் நமக்கு நல்லதை செய்யும் என்பதற்க்கு தான் இந்தளவுக்கு பூஜைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

நீங்களும் எதனையும் கொண்டாடினால் தான் தெய்வம் உங்களிடம் பிரியம் காட்டும் என்பதை புரிந்துக்கொண்டு அதன் படி நீங்கள் நடந்துக்கொள்ளுங்கள். நல்ல வாழ்க்கையை உங்கள் தெய்வம் உங்களுக்கு கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

Semma matter ...

spalaniappan said...

அய்யா இனிய காலை வணக்கம்

""குருவாயூரான் துணையிருந்தால் குழந்தை வரம் தான் கிடைத்துவிடும்
வருவாய் அனைத்தும் பெருகி வரும்..
வளர்ச்சியும் நாளும் கூடிவரும்
அருமை தெய்வம் விஷ்ணுவினை அருகில் வைத்து போற்றிடுவோம்"!!!

" ஓம் நமோ நாராயணா அகில குரோ பகவன் நமஸ்தே"!!!