Followers

Friday, August 26, 2016

இலவசம் சில விளக்கம்


ணக்கம்!
          கடந்த இரண்டு நாட்களாக சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு நேற்று இரவு தான் திரும்பினேன். திடிர் பயணமாக இருந்த காரணத்தால் முறையான அறிவிப்பை தெரிவிக்கமுடியவில்லை. 

நமது நண்பர்கள் உடனே என்னை வந்து சந்தித்துவிட்டு உடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அந்த காரணத்தால் நேற்று பதிவும் எழுதமுடியவில்லை. இனிமேல் தொடர்ந்து பார்க்கலாம்

நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவர்களால் அந்த நிலையில் இருந்து உயரமுடியும் என்பது போல தான் எழுதுவேன். இந்த இலவச சோதிட ஆலோசனை ஆரம்பித்ததில் இருந்து பலர் எனக்கு மெயிலில் அனுப்புவது சார் நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் எனக்கு ஆலோசனை தாருங்கள்  என்று கேட்டு எழுதுவார். தற்கொலை செய்ய போகிறேன் என்றால் சோதிடத்தை ஏன் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.

பொதுவாக இலவச சோதிட ஆலோசனையில் ஏதோ கஷ்டத்தில் இருந்தால் அந்த கஷ்டத்தில் இருந்து வெளிவருவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். சோதிடம் பார்ப்பதால் உடனே எதுவும் நடந்துவிடபோவதில்லை. படிப்படியான வாழ்க்கை பயணத்திற்க்கு தான் சோதிடம் உதவும். உடனே காப்பாற்றும் என்றால் அது முடியாத காரியம்

இலவச சோதிடத்தில் பலர் திருமண வாழ்க்கையை பற்றி கேட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒருவர் திருமணம் செய்ய ஆரம்பித்தால் சோதிடம் பார்ப்பதற்க்கு பணம் கூட இல்லாமலா திருமணம் செய்வார்கள்?

இலவச சோதிட சேவைக்கு வந்தால் கட்டண சோதிடம் பார்க்கும் மெயிலுக்கு மெயில் அனுப்புவது மற்றும் எனக்கு போன் செய்து பலன் கேட்பது எல்லாம் நடக்கிறது. இதனையும் தவிர்க்க பாருங்கள்.

இலவச சோதிடத்தில் மெயில் மட்டும் அனுப்பி உங்களின் கேள்வியை அனுப்புங்கள். கேள்வி பொதுவாக உங்களின் வறுமையை போக்குவதற்க்கு வழி என்னவோ அதன் அடிப்படையில் இருக்கவேண்டும். அதனைவிட்டுவிட்டு வேறு எந்த கேள்வியையும் கேட்டு அனுப்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: