வணக்கம்!
நமது ஆன்மீக அனுபவங்கள் என்ற பதிவைப்பற்றி உங்களுக்கு தெரியும். ஜாதககதம்பம் போல தனிப்பதிவாக அதனை எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஆன்மீக கருத்துக்கள் ஜாதககதம்பத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஆன்மீக அனுபவங்கள் கட்டணத்தை செலுத்தி படிப்பது போல கொண்டு வந்து ஒரு வருடங்கள் ஆகிவிட்டது.
ஆன்மீக அனுபவங்கள் ஒரு வருடத்திற்க்கு பனிரெண்டாயிரம் பணம் என்று சொல்லிருந்தேன். அதனை கட்டி பல நண்பர்கள் படித்து வருகின்றார்கள். வருடம் வருடம் பனிரெண்டாயிரம் பணம் செலுத்தவேண்டும் என்று சொல்லிருந்தேன்.
முழுவதும் அதனை மாற்றி விருப்ப சந்தாவாக மாற்றிக்கொண்டு வந்துவிட்டேன். ஒரு வருடத்திற்க்கு பனிரெண்டாயிரம் ரூபாய் பணம் கட்டிவிட்டால் அதன்பிறகு வரும் வருடத்திற்க்கு விருப்ப சந்தாவாக மாற்றிவிட்டேன். ஒரு வருடத்திற்க்கு நீங்கள் கட்டிவிட்டால் அதன் பிறகு வரும் வருடங்களில் நீங்கள் விருப்பட்டு கட்டலாம் அல்லது கட்டாமலும் படிக்கலாம். இணைப்பு துண்டிக்கபட மாட்டாது.
ஜாதககதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் கட்டணபதிவில் இணைந்துக்கொள்ளுங்கள். நிறைய நல்ல விசங்கள் அதில் இருக்கின்றது. நன்றாக தெரிந்துக்கொள்ளமுடியும் அதோடு பயிற்சியும் செய்துக்கொள்ளலாம்.
என்னால் முடிந்தளவுக்கு அனைத்தையும் பணம் இல்லாமல் செய்துக்கொடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன். ஆன்மீக அனுபவங்கள் பதிவையும் இலவசமாக கொடுக்கலாம் ஆனால் ஏற்கனவே பணம் கட்டி படித்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒரு முறை நீங்கள் பணம் கட்டிய பிறகு தொடர்ந்து படிப்பது போல் செய்து இருக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment