வணக்கம்!
சேலத்தில் நண்பர்கள் சந்தித்தபொழுது இரண்டு பேருக்கு சனி எட்டில் இருந்தது. அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் சோதிடம் பார்க்கும்பொழுது சனி எட்டில் இருந்தால் கெட்டவர்கள் என்று சொல்லிவிட்டார்கள் அதனை வைத்து நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். சனி எட்டில் இருந்தால் கெட்டவர்களா?
முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். நாம் பார்க்கும் சோதிடம் அனைத்தும் இதுபோல இருக்கலாம் என்று தான் சொல்லலாம் இப்படி தான் என்று வரையத்து சொல்லமுடியாது. உலகத்தில் ஒரு மனிதனை படைத்தால் அவனை போல் அடுத்தவர் ஒருத்தரை கடவுள் படைப்பதில்லை என்பது மட்டும் உண்மை.
இந்த உண்மை எப்பொழுது தெரியவரும் என்றால் குறைந்தது பனிரெண்டு வருடங்களுக்கு சோதிடத்தில் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு புரியவரும். நீங்கள் மட்டும் இந்த உலகத்தில் ஒருவர் உங்களை போல் அடுத்தவர் கிடையாது.
சனி எட்டில் இருந்தால் அவர் கெட்டவர் என்பது கிடையாது. சனி எட்டில் உள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர் அவர்கள் அனைவரும் கெட்டவர் கிடையாது.
சனி எட்டில் பிறந்தவர்கள் இளைமையில் கடுமையான வறுமையில் சிக்கி அதன் பிறகு கோடிஸ்வரர்களாக இருப்பார்கள். அவர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள்.
சனி எட்டில் இருந்தவர்களுக்கு வறுமை இல்லை என்றால் வேறு எதாவது பிரச்சினையில் இருப்பார்கள். அதுவும் நிரம்தரம் கிடையாது. பொதுவான பலன்கள் அதிகம் வேலை செய்யவில்லை.
நீங்கள் சோதிடத்தை தொழிலாக செய்தால் கொஞ்ச நாளில் இந்த கலை வந்துவிடும். ஒரு ஜாதகத்தை பார்த்து மிகச்சரியாக சொல்லும் வாக்கு பலிதம் கிடைக்கும். அது அனுபவத்தில் வருவது அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். எட்டில் சனி இருப்பது பல வழிகளிலும் நல்லது உங்களுக்கு நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment