வணக்கம்!
நமது ஜாதககதம்பத்தில் ஒரு சில ஆன்மீக தகவல்களும் அவ்வப்பொழுது வெளியிடுங்கள் உங்களின் ஆன்மீக கருத்தும் எங்களை போல் உள்ள ஒரு சில ஏழை மக்களுக்கும் பயன்படவேண்டும் என்று அந்த மெயிலில் எழுதியிருந்தார்.
ஆன்மீகம் என்பது ஏழை பணக்காரன் என்பது எல்லாம் கிடையாது. அவர் அவர்கள் முயற்சி செய்தாலே போதும் அது கிட்டிவிடும். ஜாதககதம்பத்தில் எழுதாதற்க்கு காரணம் இதில் வரும் பதிவுகள் பல காப்பி அடித்து அவர் அவர்களின் தளத்தில் வெளியிட்டுவிடுகின்றார்கள் என்பதால் இதில் எழுதுவதில்லை.
ஆன்மீகத்தில் ரகசியமாக இருக்கும் பல விசயங்கள் வெளிபடையாக செய்ய கூடாது என்பதாலும் இதில் எழுதுவதில்லை என்பது தானே தவிர மற்றபடி பணம் இருப்பவன் தான் ஆன்மீகம் பயிலவேண்டும் என்று ஒதுக்கவில்லை.
ஒரு ஏழை என்னை சந்தித்து எனக்கு ஒரு ஆன்மீகப்பயிற்சியை சொல்லி தாருங்கள் என்று கேட்டால் கண்டிப்பாக நான் உங்களுக்கு சொல்லிக்கொடுப்பேன். போனிலேயே அனைத்தும் கேட்டுக்கொள்ளவேண்டும் என்றால் கண்டிப்பாக அது முடியாத காரியம். உங்களுக்காக ஒரு சில ஆன்மீக விசயங்களை தருகிறேன்.
இன்றைக்கு ஆன்மீகவாதிகள் எல்லாம் சொல்லும் ஆன்மீகம் உங்களுக்கு பிரச்சினையா என்னை வந்து சந்தியுங்கள் உங்களின் பிரச்சினை தீரும் என்பார்கள். ஒரு சிலர் சித்தர்களின் வழிபாட்டு முறையைப்பற்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இன்றைய காலத்தில் ஒரு சிலர் நான் தான் ஒரு சில சித்தர்களின் பெயரை சொல்லி இந்த சித்தராக பிறந்து இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். முதலில் இதனை எல்லாம் விட்டுவிடுங்கள்.
நமக்கு பிரச்சினை என்றால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்களின் குலதெய்வ வழிபாடு செய்து இருக்கின்றீர்களாக என்பதை பாருங்கள். குலதெய்வத்திற்க்கு நீங்கள் மாதம் மாதம் செய்யவேண்டிய வழிபாட்டை செய்து இருகின்றீர்களாக என்பதை முதலில் உற்றுநோக்குங்கள். இதனை மீறி தான் அடுத்த பிரச்சினையே இருக்கின்றது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment