வணக்கம்!
கொஞ்சம் வேலை இருந்த காரணத்தால் பலனை உடனே சொல்லமுடியவில்லை. நாளை முதல் ஜாதகம் அனுப்பியவர்களுக்கு பலனை பார்த்து சொல்லுகிறேன்.
செவ்வாய் சனி மற்றும் சூரியன் இணைந்து ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவர்களின் தந்தையை அவரது பையனே கொல்லும் நிலை ஒரு சிலருக்கு அமையும். இது ஒன்பதாவது வீட்டில் இருந்தால் கண்டிப்பாக இது நடந்தே தீரும் என்று சொல்லலாம்.
இன்றைய காலத்தில் பெற்றோர்களை கவனிப்பதே குறைந்துவருகின்றது. நிறைய பெற்றோர்கள் பையனோடு வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளும் அவர்களின் வாழ்க்கை என்பது நரகமாக தான் சென்றுக்கொண்டு இருக்கும். கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள்.
செவ்வாய் சனி மற்றும் சூரியன் இணைந்தால் அவர்களின் பையன் தந்தையை கொல்லுவது கூட நிலத்தகராறு ஏற்பட்டு கூட நடக்கும். இது எல்லாம் செய்வார்களா என்று நினைக்கதோன்றும். ஒரு சில கிரகங்கள் எது வேண்டுமானாலும் செய்ய வைக்கும் என்பது தான் உண்மை.
இன்றைய காலத்தில் பையன்கள் திருமணம் ஆனவுடன் மாமியார் வீட்டு தானே உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் கண்டிப்பாக இப்படிப்பட்ட காரியத்தில் இறங்குவார்கள்.
இதற்கு பரிகாரம் என்ன செய்யலாம் என்று கேட்கலாம். உங்களுக்கு பையன் குழந்தையாக இருந்து இப்படிப்பட்ட கிரகங்கள் இருந்தால் கொஞ்சம் கோவில் குளத்திற்க்கு எல்லாம் அடிக்கடி சென்று வாருங்கள். அந்த சக்தி உங்களை காக்கும். புண்ணியமும் செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment