வணக்கம்!
ஒருவருக்கு புதன் தசா நடந்தால் அவருக்கு நிறைய அறிவு ஆற்றல் ஏற்படும் என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். புதன் ஒரு கட்டமான நிபுணர் என்று அழைக்கப்படுவார். கட்டமான நிபுணர் என்றால் கட்டக்கலை மட்டும் அன்றி வேறு துறையிலும் ஒரு தலைமை பண்பை ஏற்படுத்தி கொடுப்பார்.
ஒரு சிலருக்கு குரு தசா புதன் புத்தியில் சொந்த வீட்டை கட்டுவார்கள். புதன் புத்தி அப்படிப்பட்ட அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதை பலரின் ஜாதகத்தில் நான் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன்.
ஒரு வீட்டை கட்டவேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. பார்ப்பதற்க்கு எளிமையாக இருப்பது போல தோன்றும் ஆனால் அதற்குள் நிறைய விசயங்கள் இருக்கின்றன. தொழில்நுட்பம் மட்டும் இல்லை அதனை தாண்டி நிறைய சூட்சமங்களும் இருக்கின்றன.
உங்களுக்கு ஒரு பையன் இருந்தால் அவனிடம் நீ சொந்தமாக ஒரு வீட்டை கட்டு என்று சொல்லிபாருங்கள். அவன் அதனை கட்டினால் அவன் எந்த துறையிலும் வெற்றிபெறுவான். அந்தளவுக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கும்.
புதனின் அறிவு வெளிப்படுத்த இது எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். புதன் தசா புதன் புத்தி காலங்களில் பலர் சொந்தவீடு கட்டியுள்ளார்கள்.எந்த ஒரு தசா வந்தாலும் சரி அதில் புதன் புத்தி உங்களை நன்றாக தயார் செய்யும் நல்ல வாய்ப்பையும் தரும் என்பது அனுபவத்தில் உண்மை.
புதன் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு குறைவான யோகம் கொடுத்தால் தொடர்ந்து புதன்கிரக வழிபாட்டை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment