வணக்கம்!
ஒருவருக்கு லக்கினத்தில் ராகு கேது இருந்தால் என்ன பலன் தரும் என்பதைப்பற்றி பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் ஒரு சில கருத்தை பார்க்கலாம்.
ராகு கேது லக்கினத்தில் இருந்து பலனை தருகின்றது என்றால் முதலில் அவர்களின் தோல் கருப்பு நிறத்தில் இருக்கும். மாநிறமாக இருப்பார்கள். இது தான் முதல் விதி. கருப்பு பரம்பரையாக இருந்தால் இந்த விதி பொருந்தாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ராகு லக்கினத்தில் இருந்து ஒரு சிலர் நல்ல கலராக இருப்பார்கள் அவர்களுக்கு பல் ஒழுங்காக இருக்காது. ஒரு சிலர் கலராக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உள்ள முகப்பொலிப்பு இருக்காது.
ராகு லக்கினத்தில் இருந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஒரு சின்ன தலைவலி வந்தாலே உடனே படுத்துக்கொண்டு விடுவார்கள். உடலில் வலி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
ராகு லக்கினத்தில் இருந்தால் அவர்களுக்கு வாய்க்கும் துணை அவர்களை ஏமாற்றிவிடுவார்கள். அதாவது அவர்களை விட்டு பிரிந்து சென்றுவிடுவார்கள்.
ராகு கேது என்றாலே லக்கினம் என்று வரும்பொழுது அது ஏழாவது வீட்டோடும் சம்பந்தப்படுவதால் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும்.
உங்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட நிலையில் ராகு கேது இருந்தால் நீங்கள் ராகு கேது பரிகாரத்தில் பங்குகொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment