Followers

Wednesday, November 30, 2016

தசா மற்றும் புத்தி


வணக்கம்!
          ஒருவருக்கு புதன் தசா அல்லது புதன் புத்தி நடைபெற்றால் அவரின் தொடர்பு அதிகப்பட்சம் வாணிபம் செய்பவர்களோடு இருப்பது நன்மை பயக்கும். 

ஒரு தசாவை வலுப்படுத்த வழிபாடு பூஜை உண்ணும் உணவு மற்றும் கல் மோதிரம் போன்றவை அதிகம் பரிந்துரை செய்வார்கள். அதனை தவிர்த்து நம்மோடு பழகும் நண்பர்களை நாம் தொடர்புக்கொள்ளும் ஆட்களை அந்த தசாவுக்கு தகுந்த மாதிரி தொடர்பு வைத்துக்கொண்டால் எளிமையாக அந்த தசாவுக்கு பலன் சேர்க்கும் வழிகளாகும்.

புதன் தசா என்றாலே வாணிபம் செய்யும் நபர்களை குறிக்கும் ஒரு கிரகம் அதனால் நம்மோடு தொடர்புக்கொள்ளும் நபர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தால் மிகுந்த நன்மையை தரும்.

ஒரு சிலருக்கு அந்தந்த புத்தி காலத்தில் கூட இப்படிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். புதன் புத்தி காலத்தில் நீங்கள் இப்படிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தி அந்த புத்தியின் நன்மையை பெறலாம்.

ஒரு சிலருக்கு புதன் தசாவில் சோதிடர்களின் தொடர்பு இருக்கும். புதன் ஆளுமையின் கீழ் சோதிடர்கள் வருவதால் இப்படிப்பட்ட தொடர்பை தரும். இப்படி எல்லாம் தசா மற்றும் புத்திக்கு தகுந்தமாதிரி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: