வணக்கம்!
ஒருவர் தன்னுடைய வேலையை சரியாக செய்துவந்தாலே போதும். அவருக்கு அனைத்தும் தன்னாலே நடக்கும். குரு தசா வந்தால் ஒருவர் தன்னுடைய வேலையை மிகச்சரியாக செய்துவருவார். எந்த வேலையிலும் சொதப்பிக்கொண்டு இருக்காமல் சரியாக செய்து அவர் முன்னேற்றம் அடைந்துக்கொண்டு செல்வார்.
ராகு தசா வந்தால் ஒருவர் தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்யாமல் போய்விடுவார். எதிலும் குழப்பமாக இருப்பார். செய்கின்ற வேலையை சொதப்பி அனைத்தையும் கெடுப்பார். ராகு தசாவின் குணங்கள் இது.
உங்களுக்கு நல்ல தசா நடந்தால் நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். கெடுதல் தசா நடந்தால் நீங்கள் நல்லவராக இருக்கமுடியாது. ஒரு மனிதனை நல்லவனாகவும் தீயவனாக மாற்றுவதும் தசாவின் கையில் தான் இருக்கின்றது.
எனக்கு நல்ல தசா மற்றும் கெடுதல் தசா நடந்தாலும் நான் மிகச்சரியான திசையில் தான் செல்லவேண்டும் என்று ஆன்மீகத்தை நாடுகிறேன். ஆன்மீகம் எனக்கு சரியான வழியை காட்டும்.
தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும். உலகத்தை திருத்தவேண்டியதில்லை தன்னை திருத்திக்கொண்டால் போதும். நிறைய பதிவுகள் தருவதின் நோக்கம் உங்களை திருத்திக்கொள்வதற்க்கு வாய்ப்பாக அமையவேண்டும் என்பதற்க்காக தான் பதிவுகளை தருகிறேன்.
பல பேர்கள் பல வருடங்களாக படித்து வருகின்றார்கள் அதில் முக்கால்வாசி பேர்கள் நன்றாக வந்துவிட்டார்கள். இன்னமும் கால்வாசி பேர் படிப்பதை மட்டும் செய்துவருகிறார்கள். தன்னை திருத்திக்கொள்ளவில்லை.
சோதிடத்தை எல்லாம் நான் படித்து அதனை உங்களுக்கு செல்லுவது கூட என்னை முதலில் தயார் செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்ககாக தான் இதனை எல்லாம் தெரிந்துக்கொண்டேன். அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு விசயம் இல்லாமல் இல்லை அது என்றாவது ஒரு நாள் உங்களுக்கு பயன்படும். படித்துவிட்டு சிந்தித்து பார்த்தால் உங்களுக்கு புரியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment