வணக்கம்!
நண்பர் KJ அவர்கள் சாப தோஷத்தைப்பற்றி ஒரு கேள்வி கேட்டார். தனுசு லக்கினம் குரு பகவான் எட்டில் உச்சம் ஆகின்றார் இதற்கு விதிவிலக்கு உண்டா என்று கேள்வி கேட்டார்.
முதலில் லக்கினாதிபதி எட்டில் மறைகிறார். அவர் உச்சம் பெற்றால் கூட எட்டில் மறைவது தவறு தானே. மறைவுக்கு உள்ள கஷ்டத்தை கொடுப்பார்.
உச்சம் பெற்றால் நல்ல பலனை கொடுக்கும் உச்சத்திற்க்கு உள்ள பலனையும் மற்றும் மறைவுக்கு உள்ள பலனை சேர்த்து கொடுக்கும். கொஞ்சம் நல்லது கொஞ்சம் கெட்டது என்பது போல பலன் இருக்கும்.
நல்ல பதவியை உச்சம்பெற்றவர் கொடுத்தால் லக்கினாதிபதி மறைந்தர்க்கு கொஞ்சம் நோயையும் கொடுப்பார். நோயை உடல் வழியில் இல்லை என்றாலும் மனது ரீதியிலும் ஏதாவது சிக்கலை கொடுப்பார்.
இதற்க்கும் சாபதோஷம் உண்டு. என்ன ஒன்று என்றால் இதற்கு எளிதாக விமோசனம் கிடைக்கும் என்று சொல்லலாம். இவர்களே எளிதாக இதனை தீர்த்துக்கொள்வது போலவும் இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Thanks a lot for the Clarification Sir.
Post a Comment